27.8 C
Chennai
Saturday, Oct 19, 2024
Image 85
ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் காலையில் தண்ணீர் தேவையான அளவு தொடர்ந்து குடித்து வந்தால்…

தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை ஜப்பானியர்கள் பாரம்பரிய மாகவே பின்பற்றுகிறார்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்
உடலில் தேங்கி இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற்றிவிடும். செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். மலச்சிக்கலை உணர்பவர்கள் நிறைய தண்ணீர் பருகுவதன் மூலம் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும்.

தண்ணீர் எவ்வளவு பருகுகிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரில் கழிவுகள் வெளியேறும். உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். நச்சுக்களை நீக்குவதன் மூலம் சருமத்தை மேம்படுத்தி, முகத்திற்கு பிரகாசமும் தரும். காலை வேளையில் தண்ணீர் பருகுவது துர்நாற்றம், பல் சார்ந்த பிற பிரச்சினைகளை தடுக்க உதவும். தலைவலியையும் தடுக்கும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு வழிவகுக்கும். அதன் மூலம் உடல் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். காலையில் தண்ணீர் பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதம் சுமார் 25 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால் வேகமாக செரிமானம் நடைபெறும்.
தண்ணீரில் கலோரிகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிறைய தண்ணீர் பருகலாம். அது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி அமிலத்தன்மையை குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வதால் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். அவற்றுள் சரும பிரச்சினையும் அடங்கும். முன்கூட்டியே சரும சுருக்கங்களை ஏற்படுத்திவிடும்.வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும்போது ரத்த ஓட்டம் ஒழுங்குபடுத்தப்படுவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். தண்ணீர் அதிகமாக பருகும்போது சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறிவிடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும். சிறுநீர்ப்பை தொற்றுநோயையும் தடுக்கும். அல்சர் பிரச்சினையும் நெருங்காது. தண்ணீர் அதிகம் பருகும்போது உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேறிவிடும் என்பதால் உடலில் நோய்த்தொற்று பரவுவதை தடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்திவிடும். தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும்.

Related posts

மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம் –

nathan

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறதா ?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இந்த 4 ராசிக்காரங்க கடன்ல மூழ்கி றொம்ப கஷ்டப்படுவாங்களாம்…

nathan

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika

உங்களுக்கு இரண்டே மாதத்தில் மார்பக அளவை பெரிதாகவும், சிக்கென்றும் மாற்ற வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

காபியைக் குறைத்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

nathan

ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan