31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சாதத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா?

சாதத்தை சாப்பிடும் முறையில் உடல் ஆரோக்கியத்திற்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது உண்மையில் தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு நோய் அதிகளவில் ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்திவிடும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை குணமாகும்.

கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடவே கூடாது. மிதமான சூட்டில் தான் சாப்பாட்டை சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்வாதம், மூட்டு வாதத்தை ஆகியவை ஏற்படும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலுக்கு வலிமை தருவதோடு அல்லாமல் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்

எதுவும் பாதிக்காமல் உடலை பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடவேகூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் எல்லாம் சரியாகும்.

சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்

எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதலாகிவிடும்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கும்.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் உடலுக்கு நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து பல நன்மைகளை தரும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இந்த பேஸ்ட் மட்டும் வாங்கித் தராதீங்க…

nathan

குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

nathan

அற்புதமான எளிய தீர்வு! உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் 7 வழிமுறைகள்!!!

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan

தினமும் ரன்னிங் போகும் போது நாம் செய்யும் 7 தவறுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan

பூண்டை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம்

nathan