625.500.560.350.160.300.053.800.9 11
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பிரீசரில் இந்த பொருட்களை எல்லாம் வைத்த உடலுக்கு பேராபத்தையே ஏற்படுத்துமாம்?..

பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது மூலம் அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர அருந்த பயன்படுத்தக்கூடாது.

உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும்.

முட்டையை பிரீசரில் வைக்கக்கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது.

இந்த உருளைக்கிழங்கை சமைக்கும்போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும். மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது.

அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒருபோதும் பிரீசரில் வைக்காதீர்கள்.

குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை வைத்தால் அவற்றில் உள்ள நீர்ச்சத்துகள் ஐஸ்கட்டிகளை உருவாக்கிவிடும்.

பிறகு அதனை உபயோகப்படுத்தும்போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களையும் இழக்க நேரிடும்.

பிரீசரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதம் உள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் பிரீசரில் வைக்காதீர்கள்.

ஏனெனில் அப்படிப்பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும்.

இதற்கு ஒரேவழி தேவைப்படும்போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான். சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை பிரீசரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது.

ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லையென்றாலும், அந்த சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமையலறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினையாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை பிரீசரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கமாகும்.

பிரீசரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்தபோது இருந்த சுவையுடனும் இருக்காது. உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானது பூண்டு. தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைப்படி பூண்டானது பிரீசரில் வைக்கப்படும்போது கடினமானதாக மாறிவிடும்.

மேலும் அதன் சுவை கசப்பாக மாறிவிடும். இந்த பூண்டை உணவில் சேர்க்கும்போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக்கூடும்.

பிரீசரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும்.

இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட பிரீசரில் வைக்கும்போது தன் சுவையை இழக்கும். எனவே இவையெற்றால் பிரீசரில் வைப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்…

Related posts

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika

உங்களுக்கு தெரியுமா இடியாப்பம் அடிக்கடி சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் ?

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கட்டாயம் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்!

nathan

எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் எடையை குறைப்பதற்கு முதலில் தேவை ஆரோக்கியமான உணவு முறையாகும். உடல் எடையை குறைக்க இப்போது அதிக பிரபலமாகி வரும் ஒரு முறை பச்சை காய்கறிகள் ஜூஸாகும்.

nathan

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிச்சு பாருங்க நன்மைகள் ஏராளமாம்!!!

nathan

kirambu benefits in tamil – கிராம்பு (Clove) பயன்கள்

nathan