தானியங்களில் நன்மைகளை அளிக்க கூடிய பலவகைகள் இருந்தாலும் கருப்பு கீன்வாவின் பயன்கள் அற்புதம்.
ஏனெனில் இதில் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உள்ளன.
இந்த கீன்வாவில் புரோட்டீன், இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, ஆந்தோசயனின், காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன.
ஆதி தமிழர்கள் உணவில் இதை அடிக்கடி பயன்படுத்தி வந்தார்கள். அதனால் தான் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.
கருப்பு கீன்வா என்றால் என்ன?
- கருப்பு கீன்வா மற்றும் வொயிட் கீன்வா என்ற இரண்டு வகைகள் உள்ளன. இதில் கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு மொறுமொறுப்பான நன்மையையும் தருகிறது. இது லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் இதை உங்கள் உணவில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
- இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்களின் கூட்டம் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்தும் சேர்ந்து இருப்பது கூடுதல் பயன்.
- இரும்புச் சத்து தான் நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்கிறது.
- இரும்புச் சத்து பற்றாக்குறை இருந்தால் சோர்வு, பலவீனம் மற்றும் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கப் கருப்பு கீன்வாவில் 15% இரும்புச் சத்து அடங்கியுள்ளது.
- கருப்பு கீன்வாவில் போலேட், விட்டமின் பி போன்றவை ஆரோக்கியமான கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது. அதே மாதிரி கண்களின் ஆரோக்கியத்திற்கு, கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
- மேலும் இதில் காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்றவை அழற்சியை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- கருப்பு கீன்வாவில் ஆந்தோசயனின் அதிகளவில் காணப்படுகிறது. இந்த ஆந்தோசயனின் சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்தும், புற்றுநோய் செல்களையும் தடுக்கிறது நாள்பட்ட பிரச்சினைகள், இதய நோய்களை தடுக்கிறது.
- குறைந்த கொழுப்பு கொண்ட க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் கருப்பு கீன்வாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வருவது நல்லது.
- சில நபர்கள் கீன்வாவை எடுத்துக் கொள்ளும் போது சீரண பிரச்சனைகளை சந்திக்கின்றனர். காரணம் இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.
முக்கிய குறிப்பு
கீன்வாவை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக கழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதன் மூலம் கிருமித் தொற்று வர நிறையவே வாய்ப்புள்ளது.