26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1484288482 34
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் தெரியுமா?

நாம் சாப்பிடும் உணவுகள் சீரான முறையில் செரிமானம் அடைவதற்கு உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கு எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிகூடாது
  • இரவில் கீரை சாப்பிடக் கூடாது. அதுவும் மது அருந்தியவர்கள் அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது. இரவில் பால் குடிக்கும் போது, அதனுடன் சேர்த்து பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், யோகர்ட், முட்டை, கொள்ளு, பருப்புகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
  • முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் இவற்றால் தயாரான உணவுகளைச் சாப்பிட்ட பின் பாலைக் குடிக்கவே கூடாது. இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.
  • பால், தயிர் சாப்பிட்ட பின் அதோடு பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நம் ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கி, உடலில் கபம், பித்தம் ஆகிய பிரச்சனையை உண்டாக்கும்.
  • சம அளவுள்ள தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால், அது விஷமாகும். எனவே அதிகமாக தேன், குறைவாக நெய் அல்லது குறைவாக தேன், அதிகமாக நெய் என்று கலந்து சாப்பிடலாம்.
  • தேனை சூடுபடுத்தவோ, வேகவைக்கவோ, சமைக்கவோ பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது தன் தன்மையை இழந்து, நச்சுப்பொருளாக மாறிவிடும். அதேபோல காலையில் தேனை வெந்நீரோடு சேர்த்தும் குடிக்கக் கூடாது.
  • பால், யோகர்ட், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றோடு எலுமிச்சை பழத்தை சேர்த்துச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அசிடிட்டி மற்றும் வயிற்றுப் பிரச்னையை உண்டாக்கும்.
  • ஒரே நாளில் சிக்கன் மற்றும் பன்றி இறைச்சியை சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனால் குடலுக்கு அழுத்தம் அதிகமாகி, பல நச்சுக்களை உருவாக்கி, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தையே பாதிக்கும்.
  • இரவில் நம் உடலின் ஜீரண மண்டலம் மிகவும் சோர்வாக இருப்பதால், இரவு நேரத்தில் தயிர், மோரை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது பல்வேறு விதமான ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கிவிடும்.
  • இறைச்சி சாப்பிடும் போது தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது அஜீரணம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாக்கும்.
  • பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
  • வாழைப்பழம்-மோர், தயிர்-பேரீச்சம்பழம், பால்-மதுபானம் இந்த உணவுகளின் சேர்க்கையை சாப்பிடவேக் கூடாது. ஏனெனில் அதனால் மூச்சுத்திணறல் பிரச்சனை உண்டாகும்.
  • நெய்யை 10 நாட்களுக்கு மேல் வெண்கலப் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்திருந்தால், அது நச்சுப் பொருளாக மாறிவிடும்.
  • சமைத்த உணவை சமைக்காத உணவுடன் சேர்த்து சாப்பிடவோ கூடாது. ஏனெனில் அதனால் அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் உண்டாகும்.

Related posts

அன்னாசி பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

அதிகப்படியா ஆரஞ்சு சாப்பிடுவது உங்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவை ஏற்படுத்தும்

nathan

மருத்துவ குணங்கள் நிறைந்த அவரைக்காயின் பயன்கள்….! இத படிங்க!

nathan

டார்க் சாக்லேட் இதயத்திற்கு நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…

nathan

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

nathan