30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026
​பொதுவானவை

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. விவாகரத்தையும், அதனால் ஏற்படும் மன வலியையும் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உடையாமல் தீர்வு காண வேண்டும்.

எந்த ஒரு தம்பதியினரானாலும் சரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வது என்பதை பார்க்க வேண்டுமே தவிர, விவாகரத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. எந்த தம்பதிகள் தங்கள் உறவை பாதுகாக்க சோர்வு இல்லாமல் பாடுபடுகிறார்களோ, அவர்களின் உறவே நிலைத்து நிற்கும். தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம்.

பிரச்சனை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, நம் கையை மீறி புயலாக வளரும் முன், பேசி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். குறிப்பாக, திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும். தேவையான அளவு நேரத்தை திருமண வாழ்க்கையில் முதலீடு செய்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் (லாபம்) செழித்து இருக்கும்.

திருமண வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க காதல் மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன், உங்கள் மனைவியை காதலித்த போது, உங்களிடம் அவர் ரசித்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அதை போல் மீண்டும் காதலித்து அன்பை வெளிக்காட்டலாம். இது இருவரின் திருமண மன உளைச்சலை நீக்கி, சந்தோஷத்தை உண்டாக்கும். மனைவியை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு புரிந்து உங்களிடம் இருக்கும் குறைகளை திருத்துவதற்கு முயற்சி செய்தால், மனைவியும் திருந்திவிடுவார்கள். மனைவி அல்லது கணவன் செய்யும் தவறை முழு மனதுடன் மன்னிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.

Related posts

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

பெண்கள் ஆண் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லும் போது கவனம் தேவை

nathan

உங்கள் இரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா… கட்டை விரல் போதும்! கட்டாயம் படிக்கவும்..

nathan

எலுமிச்சை ரசம் செய்முறை விளக்கம்

nathan

உங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan

நெருங்கிய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா?

nathan

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்

nathan

கோபமாக இருக்கும் கணவரை சமாதானப்படுத்துவதற்கான வழிகள்

nathan