27.5 C
Chennai
Tuesday, Aug 19, 2025
muslim wedding
​பொதுவானவை

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. விவாகரத்தையும், அதனால் ஏற்படும் மன வலியையும் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உடையாமல் தீர்வு காண வேண்டும்.

எந்த ஒரு தம்பதியினரானாலும் சரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வது என்பதை பார்க்க வேண்டுமே தவிர, விவாகரத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. எந்த தம்பதிகள் தங்கள் உறவை பாதுகாக்க சோர்வு இல்லாமல் பாடுபடுகிறார்களோ, அவர்களின் உறவே நிலைத்து நிற்கும். தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம்.

பிரச்சனை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, நம் கையை மீறி புயலாக வளரும் முன், பேசி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். குறிப்பாக, திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும். தேவையான அளவு நேரத்தை திருமண வாழ்க்கையில் முதலீடு செய்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் (லாபம்) செழித்து இருக்கும்.

திருமண வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க காதல் மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன், உங்கள் மனைவியை காதலித்த போது, உங்களிடம் அவர் ரசித்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அதை போல் மீண்டும் காதலித்து அன்பை வெளிக்காட்டலாம். இது இருவரின் திருமண மன உளைச்சலை நீக்கி, சந்தோஷத்தை உண்டாக்கும். மனைவியை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறு புரிந்து உங்களிடம் இருக்கும் குறைகளை திருத்துவதற்கு முயற்சி செய்தால், மனைவியும் திருந்திவிடுவார்கள். மனைவி அல்லது கணவன் செய்யும் தவறை முழு மனதுடன் மன்னிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.muslim wedding

Related posts

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

சுவையான வெண்டைக்காய் சாம்பார்

nathan

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?… இல்லைன்னா இதை படியுங்க…

nathan

ஹோலி பண்டிகை என்றால் என்ன, அது ஏன் கொண்டாடப்படுகிறது?

nathan

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

nathan

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

சுவையான சத்தான மக்காச்சோள சுண்டல் செய்வது எப்படி?

nathan

குழந்தைகளை விரட்டும் கொடிய மிருகங்கள்

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan