34.2 C
Chennai
Monday, Jul 20, 2026
​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி – கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

karamani sundal

தேவையான பொருட்கள் :

காராமணி – 250 கிராம்
கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்

செய்முறை :

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் பாதியளவு கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும்.

* இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

* சுவையான சத்தான காராமணி – கேரட் சுண்டல் ரெடி.

Related posts

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

சூப்பரான கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்!

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

சூப்பரான நெய்யப்பம் செய்வது எப்படி?

nathan

பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan

தவா பன்னீர் மசாலா

nathan

முட்டை நூடுல்ஸ் / Egg Noodles tamil

nathan