26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
11 15
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…இப்டியெல்லாம் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா லவ் செட் ஆகாது!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும், அதே போல அவர்களது விருப்பங்கள், நம்பிக்கைகள்,வாழ்க்கை முறை என எல்லாமே வேறுபட்டு இருக்கும். திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் இயல்பு வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள், திரையில் பத்து பேரை அசால்ட்டாக தூக்கி பந்தாடும் ஹீரோ இயல்பில் மிகவும் அமைதியானவராக, சாந்தமானவராக இருப்பார்.

உங்களுடைய பழக்கவழக்கங்களைச் சார்ந்தே உங்களது சுற்றமும் நட்பும் அமையும். பழகுறதுக்கு ரொம்ப எளிமையான மனுஷன், உதவின்னு கேட்டா கண்டிப்பா செய்வாறு என்று பேசுவதற்கும்…. அய்யோ…. சரியான பிசாசு, பக்கத்துல போனாலே காட்டு கத்து கத்துவான். எப்போ எந்த மூட்ல இருப்பான்னே சொல்ல முடியாது என்பதற்கும் வித்யாசங்கள் இருக்கிறது தானே…. சாதரண நபர்களுக்கேஇப்படியெனும் போது இங்கே காதலின் பங்கு இன்னும் அதிகமாக இருக்கிறது.

எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது…. எங்க எல்லா பொண்ணுகளும் கமிட்டட்னு சொல்றாங்க, லவ் பண்ற மாதிரி பேசுறாங்க ஆனா லவ்வச் சொன்னா விலகி தெறிச்சு ஓட்றாங்க என்று நினைக்கிறீர்களா அதே போல…. என் ஆளு என்ன சொன்னாலும் சண்டைக்கி வர்ற எப்டி ஹேண்டில் பண்றதுன்னு தெரியல என்று தவிப்பவர்களுக்கும் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிம்பம் :

ஆம், உங்களது கேரக்டர், உங்களது செயல்பாடு தான் உங்களைப் பற்றி வெளிப்படுத்தும் பிம்பமாக இருக்கிறது. உங்களையும் அறியாமல் வெளிப்படுத்தக்கூடிய சில பழக்கங்கள் தான் பிறரிடம் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்த குணங்கள் எல்லாம் உங்களுக்கும் இருக்கிறதா என்று சரிபாருங்கள் இருந்தால் அதனை மாற்றிக் கொள்வது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்படலாம்.

#1

எல்லாவற்றிருக்கும் காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களைப் பார்த்தாலே நண்பர்கள் எரிச்சலடைவார்கள். உங்களிடம் பேசுவதை தவிர்ப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

சிலவற்றிற்கு காரணங்களை எல்லாம் தேடித்தேடி சொல்ல முடியாது. எமோஷனலாக அணுக வேண்டிய விஷயத்தைக்கூட சரியான காரணத்துடன் எதிர்ப்பார்க்ககூடாது.

#2

ஓவர் ப்ரொடெடிவாக இருக்காதீர்கள். அவர்களுக்கான இடைவேளியை சுதந்திரத்தை கொடுத்திடுங்கள். எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, தெரியாமல், அல்லது கேஷுவலாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தைக்கூட பெரிதுபடுத்தி சண்டையிடுவது, கோவித்துக் கொள்வது ஆகியவை செய்கிறவர்கள் என்றால் உங்களிடம் பேசவே கொஞ்சம் தயங்கித்தான் நிற்பார்கள்.

#3

நம்பிக்கைகள். யாருக்கும் தங்களது நம்பிக்கையை குளைக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது வெறுப்பு தான் உண்டாகும். அது உங்களுக்கு சாதரணமான விஷயமாக கடந்து போனாலும் அவங்கள அது நம்பிக்கை, அதுல உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் , விருப்பமில்லை என்றாலும் வெளிப்படையாக தீர்க்கமாக அது தான் உறுதியான முடிவு என்று எப்போதும் சொல்லாதீர்கள்.

அவர்கள் உங்களைச் சுற்றி இருக்கக்கூடியவர்கள்.

#4

கவலைகள், எப்போதும் விரக்தியான பேச்சு…. உனக்கென்னடா நல்ல வேல கிடச்சுருச்சு நான் பாரு இன்னும் இங்கயே சுத்திட்டு இருக்கேன். என்று உங்களது கம்பேரிசன் கூட விலக வைத்திடும்.

எப்போதும் ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருக்காதீர்கள். இது உங்களுக்கும் நல்லதல்ல.

#5

சுயநலத்துடன் இருப்பது எப்போதும் யாருக்கும் பிடிக்காது. காதல் என்று வரும் போது இந்த விஷயம் பயங்கரமாக வேலை செய்திடும். அதே போல நண்பர்களுடன் கூட்டமாக சென்றிருக்கும் போது நீங்கள் தனியாக வருவது, அல்லது உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் வேலைகளை செய்யாதீர்கள்.

#6

அவன் வந்து சொல்லட்டும், அவ வந்து கேக்கட்டும் என்று பிறர் வந்து என்னை அணுகினாள் நான் பேசுவேன் என்று இருக்காதீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு அன்பை வெளிப்படுத்துகிறீர்களோ அதே அளவுக்கு உங்களுக்கு திரும்பி வரும் என்பதை மறந்து விட வேண்டாம்.

நிறைய பேசுங்கள், உங்களை எப்படியெல்லாம் நடத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அதே போல பிறரை நடத்துங்கள்.

#7

கோபம். இது உங்களுக்கு மிகச்சாதரணமாக தோன்றலாம். ஆனால் இது உங்கள் மீதான மதிப்பை குறைக்கும். பிறரை உங்களிடமிருந்து விலகி ஓட வைக்கும். எதைச் சொன்னாலும் முறைப்பான் எப்போ கோபப்படுவன்னு தெரியாது எதுக்கு வம்பு பேசாம இருக்க வேண்டியது தான் என்று நினைக்கூடும்.

தவறோ, அதில் விருப்பமில்லை என்றாலோ அதை உணர்த்துங்கள். இப்படிச் செய்யாதே இப்படிச் சொல்லாதே…. எரிச்சலாக இருக்கிறது பிடிக்கவில்லை என்பதை உணர்த்த வேண்டும் , அதைத் தாண்டி பிடிக்காத விஷயத்தை ஏன் செய்தாய் என்று கத்துவது தவறு.

#8

என்கிட்ட யார் சொல்றா, எல்லாம் உன் இஷ்டப்படி தான செய்துட்டு இருக்க இப்ப மட்டும் என்ன என்று மனதில் ஒன்றை நினைத்து பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். அதே போல எல்லாம் உங்கள் விருப்பப்படி, நீங்கள் எதிர்ப்பார்த்தபடி தான் நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

#9

காத்திருப்பது, பிறருக்காக சில வேலைகளைச் செய்வது எல்லாம் நேர விரையம் என்று நினைக்க ஆரம்பித்தால் உங்கள் நண்பர்கள் உங்களுடன் உரையாடுவது நேர விரையம் என்று நினைத்து விடுவார்கள்.

பிறருக்கு நேரத்தை ஒதுக்குங்கள், அது வெட்டிக் கதை பேசுவதாக, திரைப்படம் பார்ப்பதாக, அல்லது ஏதேனும் உதவி செய்வதாக இருக்கலாம். உனக்காக போய் ரெண்டு மணி நேரம் வீணாப்போச்சு என்று பேசுவதை தவிர்த்திடுங்கள்.

#10

பாராட்டுங்கள் எப்போதும் உங்களைப் பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டு இல்லாமல், பிறர் ஜெயிக்கும் போதோ அல்லது ஏதேனும் புதிதாக ஓர் முயற்சியை ஆரம்பிக்கும் போது, வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கக்கூடிய சின்ன சின்ன வெற்றிகளுக்கு கூட பாராட்டுங்கள். இந்த பாராட்டு அவர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்.

அந்த உற்சாகத்திற்காகவே உங்களிடம் தேடி வருவார்கள்.

#11

உங்களிடம் இருக்கக்கூடியவற்றை பகிர்ந்தளிக்க முன் வாருங்கள். அவை பணம்,உணவு,அறிவு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களிடம் இருப்பவற்றை முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும் சுயநலத்துடன் எனக்காக என்று இருந்து கொண்டு நண்பர்கள் மட்டும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாள் அது முட்டாள் தனம்.

#12

உங்களுடைய உதவி பேசப்பட வேண்டும், உங்களுடைய வெற்றி கொண்டாடப்பட வேண்டும், நீங்கள் கேட்காமலேயே உதவிகள் தானாக நடக்க வேண்டும் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.

எதார்த்தமாக நடந்திருந்தாலும் கூட இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நீங்களாக யோசிக்காதீர்கள். நான் செய்கிற ஒவ்வொரு விஷயத்திற்கும் எனக்கு உடனே பிரதி பலன் கிடைத்திட வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைப்பது உங்களுக்கு தான் ஆபத்து.

#13

நான் இவ்ளோ செய்றேன், என் உதவிய யாராவது நினச்சு பாக்குறாங்களா என்று நீங்களே புலம்பிக் கொண்டு உங்களின் சுற்றத்தை குறை கூறிக் கொண்டு உங்களை நீங்களே தனிமைபடுத்திக் கொள்வீர்கள். நாளடைவில் இருக்கிற நான்கைந்து நட்புகளும் விலகி ஓடும்.

மேற்கூரிய குணங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவை இருக்கிறதா என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். பிறர் கண்டுபிடித்து சொல்வதை விட சுயபரிசோதனை செய்து கொள்வதில் சிறந்த பலன் என்ன தெரியுமா? அதனை நீங்கள் தவறு என்று உணர்கிறீர்கள். விரைவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள்ளேயே தோன்றிடும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்த அறை எங்கு அமைக்கவேண்டும் தெரியுமா…?

nathan

குளிர்காலத்தில் உடலை சுறுசுறுப்பாக கட்டுக்குள் வைக்க என்ன செய்யவேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ் எட்டு வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்

nathan

தெரிந்துகொள்வோமா? உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

nathan

மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம் –

nathan

கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan

உங்கள் கண்களில் இந்த பிரச்சனை இருந்தால், உங்களுக்கு மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று இருக்கலாம்!

nathan