30.8 C
Chennai
Monday, May 20, 2024
4 diet
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றால், பலருக்கும் அதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதற்கு முக்கிய காரணமே இன்றைய அதிநவீன உலகத்தில் நேரம் கிடைக்காமல் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வேலைப்பளு, சாப்பிட வெளியே செல்வது, பலசரக்கு மற்றும் காய்கறி வாங்குதல், மருத்துவரை சந்தித்தல் போன்ற பல காரணங்களை நீங்கள் கூறலாம். இத்தனை வேலைகளுக்கு மத்தியில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நாம் தவறவிடுகிறோம். இதனால் பலருக்கும் உடல் எடை அதிகரித்து உடல் வலிகள் வந்து சேர்கிறது.

இருப்பினும் பொதுவான இந்த பிரச்சனைகளுக்கு சில எளிய தீர்வுகள் உள்ளது. அதனை பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியத்திற்கான இலக்குகளை சுலபமாக அடையலாம் – அது உடல் எடையை குறைப்பதாக இருக்கட்டும், வரை தொனியில் படுத்துவதாக இருக்கட்டும் அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரமாரிப்பதாகட்டும்.

இப்போது ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவழிக்காமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் எண்ணத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கை அடைய வேண்டுமானாலும், அதற்கு உங்கள் எண்ணத்தை முதலில் நிர்ணயிக்க வேண்டும். உங்களின் தேவை என்னவென்றும் அது எதற்கு தேவை என்றும் உங்களுக்கு தெளிவாக தெரிந்தால், அதனை அடைய போதிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்குவீர்கள். கூடுதலான உந்துதல் மற்றும் ஊக்கத்தையும் உணர்வீர்கள். உங்களுக்கு போதிய சேவையை அளிக்காத விஷயங்களில் உங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்க மாட்டீர்கள். அதற்கு காரணம், நீங்கள் எடுக்க வேண்டிய சரியான பாதையின் மீதே உங்களின் கவனம் இருக்கும். அது உங்கள் இலக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் உங்களின் நோக்கங்கள் நேர்மறையான மற்றும் சுய அன்பு உள்ள இடத்தில் இருந்து, தண்டனை மற்றும் குற்றம் இல்லாத இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். இதனால் உங்கள் பாதைக்கு இடைஞ்சலாக எது வந்தாலும் சரி, அதனை எதிர்த்து வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள்.

அட்டவணையை தயார் செய்யுங்கள்

பல நேரங்களில் ஒரு நாளில் நமக்கு தேவையானது கிடைப்பதில்லை என உணர்வோம். அதற்கு காரணம் நாம் நம் நேரத்தை திறம்பட பயன்படுத்துவதில்லை. அதனால் நாள்காட்டியில் உங்கள் அட்டவணையை உண்டாக்குங்கள். ஒரு வாரத்தில் உங்களுக்கு நடக்க வேண்டிய அனைத்தையும் எழுதுங்கள். அப்படியே அதை எப்போது செய்வீர்கள் என்பதையும் எழுதுங்கள். உங்கள் நாட்களை முன்னுரிமைப்படுத்த தொடங்கி விட்டீர்களானால், உடற்பயிற்சி செய்ய ஒரு 30 நிமிடமாவது கண்டிப்பாக உங்களுக்கு கிட்டும்.

குறைவே அதிகமானது

உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாடத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான இடைவெளி பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், குந்துகைகள், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

உணவில் கவனமாக இருங்கள்

உடற்பயிற்சியில் ஈடுபட்ட நாளன்று நன்றாக வியர்த்து கொட்டினால், எவ்வளவு பசிக்கும் என்பதை கவனித்துள்ளீர்களா? அதற்கு காரணம் உங்கள் மெட்டபாலிச வீதம் அதிகரித்திருக்கும். கூடுதலாக உடல் முழுவதும் உங்கள் கலோரிகள் தொடர்ந்து எரிக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், உங்கள் செரிமானத்தையும் கூட மேம்படுத்துகிறீர்கள். அதனால் இவ்வகை நாட்களில் அதிகமாக உண்ணுவீர்கள். இருப்பினும் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் அதே பழக்கத்தை கடைப்பிடிக்காதீர்கள். அப்போது உங்கள் ஆரோக்கியத்தை பேணிட குறைவாகவும் ஆரோக்கியமானதாகவும் உட்கொள்ளுங்கள்.

முயற்சியை தொடருங்கள்

உங்களால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என்றாலோ உங்களால் முனைப்புடன் செயலாற்ற முடியாது என்பதில்லை. உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேறு வழிகளை தேர்ந்தெடுங்கள். லிஃப்ட்க்கு பதிலாக படிகளை பயன்படுத்துதல், வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு நடப்பது, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு பின் நடை கொடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் கூட ஈடுபடலாம்.

குதூகலமாக இருங்கள்

உங்களுக்கு பிடிக்காத உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்தால் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படாது. அதே போல் அவைகளை செய்யும் போது, நீங்கள் ஆக்க வளமையுடன் செயல்பட மாட்டீர்கள். இதனால் போதிய பயன் கிடைக்காமல் போகும். அதேப்போல அதிக நேரத்தை ஜிம்மில் செலவு செய்யும் எண்ணமும் தோன்றக்கூடும். நல்லதொரு வியர்வை சிந்தும் நேரத்தை செலவிட பல வழிகள் உள்ளது. அதனால் உங்களுக்கு பிடித்தவைகளை தேர்ந்தெடுங்கள். அவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவைகளைப் பற்றி கற்றுக்கொண்டு அதனை அனுபவிக்க தொடங்குங்கள். ஸூம்பா வகுப்பு, ஸ்பின் வகுப்பு, குத்துச்சண்டை போன்றவைகளை முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் செய்வதை விரும்பி செய்தால், அதனை தொடர்ந்து செய்வீர்கள். அதனால் அதிக பயனையும் பெறுவீர்கள்.

உங்களுக்கு நீங்களே சிறந்த நண்பனாக விளங்குங்கள்

உடற்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை என பல முறை நம்மை நாமே குறை கூறி குற்ற உணர்வை வளர்த்திருப்போம். ஆனால் திட்டமிட்ட அனைத்தையும் செய்து ஒரு இயந்திரத்தை போல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே. வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் தானே. அதனால் பரவாயில்லை. ஆனால் என்ன, எப்போதுமே நாளானது உங்களுக்காக காத்திருக்கிறதல்லவா? அதனால் நமக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிட்டும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானது – என்ன ஆனாலும் சரி உங்களுக்கு நீங்களே ஆதரவு அளித்து உங்களை நீங்களே காதலிக்கவும் செய்யுங்கள். அப்படி செய்யும் போது ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை எப்படி எடுத்து செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்பதை கண்டு நீங்களே வியப்படைவீர்கள். எப்போதும் வீழ்ச்சியடையாமல் இருப்பதல்ல வெற்றி. ஆனால் எத்தனை முறை விழுந்து எழுந்திருக்கிறோம் என்பதை பொறுத்தே அது அமையும்.

Related posts

எது நல்ல கொழுப்பு? அதை எவ்வாறு அதிகரிப்பது?

nathan

வாரம் மூன்று முறை உடலுறவில் ஈடுபடுவதால் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்!!

nathan

கல்லீரல் பாதிப்பை குணமாக்கும் துளசி

nathan

பரிசுப்பொருளை தேர்ந்து எடுப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கல்யாணமுருங்கையை இப்படி சாப்பிட்டால் ஆஸ்துமா பூரண குணமாகும்…

nathan

நாள்பட்ட நெஞ்சு சளியை காணாமல் செய்ய வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அவசியம் படிக்க.. கர்ப்ப கால மூலநோய் – தவிர்க்கும் வழிமுறைகள்

nathan