27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
images 13
ஆரோக்கியம்எடை குறைய

கொழுப்புக்களை உடைத்து எடையைக் குறைக்கும் பேரிச்சம் பழம்!

பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பேரிச்சம் பழத்தின் மூலம் உடல் எடையையும் குறைக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், பேரிச்சம் பழத்தில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து, உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன், உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ஸ்நாக்ஸ் நேரத்தில், ஜங்க் உணவுகள், வறுத்த உணவுகள் என்று தேர்ந்தெடுத்து சாப்பிடாமல், நட்ஸ், பேரிச்சம் பழம் என்று ஆரோக்கியமானதை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான செலினியம், மக்னீசியம் மற்றும் காப்பர் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் இருப்பதால், இவை வயிற்றை விரைவில் நிரப்புவதுடன், அளவுக்கு அதிகமாக கண்ட கண்டதை உண்பதைத் தடுக்கும்.

பேரிச்சம் பழம் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, குடலியக்கம் சீராக நடைபெற உதவும். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மெட்டபாலிசமும் அதிகரிக்கும். இதன் மூலம் உடல் எடை ஆரோக்கியமான வழியில் குறையும். பேரிச்சம் பழத்தின் உள்ள நிகோட்டின், செரிமானத்தை சீராக்கி, வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும். முக்கியமாக வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். உடலில் செரிமானம் நன்கு நடைபெற்றாலே, உடல் எடை சரியான அளவில் இருக்கும்.

எடையைக் குறைக்கும்

பேரிச்சம் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், ஆற்றலை அதிகரிக்கும் பொருள் அதிகமாகவும் உள்ளது. அதாவது உடனடி ஆற்றலை வழிங்கும் இயற்கை சர்க்கரைகளான புருக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் உள்ளது. எனவே பசிக்கும் போது கண்ட பொருட்களை சாப்பிடாமல் பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.பேரிச்சம் பழம் நன்கு சுவையாக இருப்பதோடு, கொழுப்புக்கள் சுத்தமாக இல்லை. ஆகவே இதனை எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரிக்காது. பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், சல்பர் போன்றவை இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்கவும் உதவுகிறது. எனவே காலை உணவின் போது பேரிச்சம் பழத்தை உட்கொண்டு, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, எடையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பசியின் காரணமாக நன்கு வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் தூக்கமாகவும் மிகவும் சோம்பலாகவும் இருக்கும். இப்படி உணவு உண்ட பின் தூங்கினால், உடலில் கொழுப்புக்கள் சேர்ந்துவிடும். எனவே உணவு உண்ட பின்னர் பேரிச்சம் பழத்தை 2-3 சாப்பிட்டால், உடலுக்கு ஆற்றல் கிடைத்து, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Related posts

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா முழங்கையை இடித்துக்கொண்டால், ஷாக் அடித்தது போல் இருப்பது ஏன் தெரியுமா.?!

nathan

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

அசால்ட்டாக உடல் எடையை ஏற்றி இறக்கும் அனுஷ்கா: பின்னணியில் இருக்கும் இரகசியங்கள்!!!

nathan

எடையைக் குறைக்க விரும்பறீங்களா? இதைச் செய்யுங்க முதலில்

nathan

இயற்கை முறையில் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

nathan

தொப்பை குறைய உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika

திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்

nathan