மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் மிகவும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இக்காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மேலும் சிலருக்கு டென்சனாகவும், வசதியற்றதாகவும் இருக்கும். இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் கர்ப்ப காலத்தில் தான் கடுமையான மூட்டு வலியையும் பெண்கள் சந்திப்பார்கள். மூட்டு வலி மட்டுமின்றி, முதுகு வலியையும் பெண்கள் சந்திப்பார்கள்.

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து வேறுபடும். சரி, உங்களுக்கு கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவதற்கான காரணங்கள் ஏன் என்று தெரியுமா? இங்கு அந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடை அதிகரிப்பது

கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகரிப்பதும் ஒரு காரணமாகும். உடல் எடை கர்ப்ப காலத்தில் அதிகரிப்பதால், இந்த வலியானது இடுப்பு, கால் மூட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் வரும்.

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பது

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால், கீழே உட்கார்ந்து எழும் போது மணிக்கட்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் கடுமையான வலிக்கு உள்ளாகும். மேலும் இந்த வலியானது கொஞ்சம் கொஞ்சமாக கைக்கும் வந்துவிடும்.

தூங்கும் நிலை

தூங்கும் நிலையினாலும் வலிகளானது ஏற்படக்கூடும். உதாரணமாக, இடது பக்கமாகவே இரவு முழுவதும் தூங்கினால், காலையில் எழும் போது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படக்கூடும்.

ஹைப்போ தைராய்டிசம்

சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஹைப்போ தைராய்சமானது வரக்கூடும். அப்படி ஹைப்போ தைராய்டிசம் வந்தால், அவை மூட்டு வலியை ஏற்படுத்தும்.,

ஹார்மோன் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் இடுப்புத் தசைநாண்கள் மற்றும் தசைநார்களை ரிலாக்ஸ் செய்யும் ஹார்மோன்களானது வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படும் ஹார்மோன்களானது உடலின் மற்ற மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் மற்றும் தசைநார்களை தளர்வடையச் செய்வதால், மூட்டு வலிகள் ஏற்படுகின்றன.

அலுவலக வேலை

தற்போது பெரும்பாலான பெண்கள் ஒன்பது மாதம் வரை அலுவலகத்திற்கு சென்று வேலைப் பார்க்கிறார்கள். இப்படி அவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து, நின்று வேலை செய்வதால், அவர்களுக்கு முதுகு வலி, மூட்டு வலி, கணுக்கால் வலி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button