27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
24 pumpkin c
ஆரோக்கிய உணவு

சுவையான பூசணிக்காய் சப்பாத்தி

பொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் செய்வோம். ஆனால் பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இங்கு பூசணிக்காயை கொண்டு எப்படி சப்பாத்தி செய்வது என்று கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபியானது காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பூசணிக்காய் சப்பாத்தி ரெசபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கப்

கோதுமை மாவு – 3 கப்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி ரெடி!!!

Related posts

கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

nathan

Fast Food உணவுகள் உங்கள் உடலை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika

ஒரே வாரத்தில் 3 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பன்னீர் ‌தயாரிக்கும் முறை

nathan

இரவில் பிரியாணி சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிச்சடி

nathan

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

இத்தனை வகையான சுவைமிக்க கிரீன் டீ உ்ள்ளதா ?

nathan