28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் …!

பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.

காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

புற்று நோய் செல்களை அழிக்கும்

நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு காரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.

கண்பார்வை குறைபாட்டினை போக்கும்

வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் காரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண்நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி காரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது.

வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் காரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

பக்கவாதத்தை அண்டவிடாது

காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் காரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு காரட் போக்கிவிடும்.

அல்சரை குணப்படுத்தும் 

பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது.

அல்சர் நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் காரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும்.

வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு காரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் காரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan

அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிக்கென்ற உடலைப் பெற உதவும்..

nathan

அவசியம் படிக்க..இவர்கள் மட்டும் கிரீன் டீ குடித்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

nathan

antioxidant benefits in tamil – ஆன்டி-ஆக்ஸிடெண்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கும் சோம்பு !!

nathan

பெண்களே! வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? வெள்ளைப்படுதல் நோய்.!

nathan