25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
images 11
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின் “ஏ’, வைட்டமின் “பி’, வைட்டமின் “பி2′, வைட்டமின் “சி’, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. கறிவேப்பிலை, முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை
பச்சையாக தினமும், காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன.
அதிலும் இதனை தொடர்ந்து, 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் என்பதற்கான பட்டியல் இதோ:
கொழுப்பு கரையும். காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு
பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். அதேபோல் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வர, முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேறிவிடும். கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில்
உள்ள வைட்டமின் “ஏ’ மற்றும் “சி’ கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
இனி, சாம்பாரில் கறிவேப்பிலை இருந்தால் தூக்கி வீச மாட்டீர்களே…!

Related posts

healthy tips, கல்லீரல் கொழுப்பை எரிப்பதை நிறுத்தினால் உடல் பருத்து குண்டாகிடுமாம்!

nathan

உங்கள் கவனத்துக்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

nathan

சளி, மாத விலக்கு, வாந்தி, கர்ப்ப காலங்களில் மருந்தாகும் பழச்சாறுகள்!

nathan

ரோஜாவின் 5 மருத்துவ குணங்கள்!

nathan

வித்தியாசமான சுவையுடன் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

சாதம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் !! அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கரிசலாங்கண்ணி பொடி சாப்பிடும் முறை

nathan