30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
download1
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

செரிமானம், மலம் பிரச்சனை, உடல் பருமன், குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, இரத்த சோகை, ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது தேன்.

ஆனால் இந்த தேனை சூடு செய்து சாப்பிடக்கூடாது.

தேனை சூடு செய்யும் போது, உடலுக்கு தேவையற்ற வகையில் இது உருமாறுகிறது. மற்றும் செரிமானம் செய்ய கடினமான பொருளாக தேன் மாறுகிறது என அறிவியல் கூறுகிறது.

தேனை சூடு செய்யும் போது, தேனில் எச்.எம்.எப் (Hydroxymethylfurfuraldehyde), எனப்படம் கெமிக்கல் வெளிப்படுகிறது.

இது விஷத்தன்மை கொண்ட பொருள் ஆகும். மற்றும் புற்று உண்டாக்க கூடிய திறனுடையது.

மற்றும் தேனை சூடு செய்யும் போது, அதில் பெராக்ஸைட்களும் உருவாகின்றன. இது நமது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஓர் பொருள் ஆகும்.

தேனை சூடு செய்வதால் செரிமானக் கோளாறு, மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் உருவாவதுடன். மூலக்கூறுகள் சளி அல்லது அடைப்பு போன்று ஆகிறது.

உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துவிடும் என்பதால் தான் தேனை சூடு செய்து சாப்பிடக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

பிரெட் போன்ற உணவில் கூட இடையில் தடவி சூடு செய்தல் கூடாது. தேனை அப்படியே சாப்பிடுவது தான் உடல்நலனுக்கு நல்லது.

சுடு நீரில் தாராளமாக தேனை கலந்து சாப்பிடலாம். ஆனால், கலந்த பிறகு மிதமான சூட்டிற்கு வந்த பிறகு உட்கொள்ளவும். கொதிக்கும் நிலையில் அல்லது அதிக சூட்டில் பருகுவதை தவிர்க்கவும்.

Related posts

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா!

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

திபெத்திய மக்களின் வெள்ளையான மற்றும் வலிமையான பற்களின் ரகசியம் என்ன தெரியுமா?

nathan

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு அடுத்தவங்க மனசுல இருக்கிறத படிக்கும் சக்தி இருக்காம்…

nathan

இயற்கை முறையில் குடிநீரை வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

nathan

மாதுளை பயன்படுத்தும் விதம்

nathan

தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகள்!…

nathan

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika