25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
parotta with veg kuruma
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பரோட்டா ரொம்ப பிடிக்குமா? இதில் கலக்கப்படும் இந்த கொடிய கெமிக்கல் பற்றி தெரியுமா?

இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா. நமது ஊர் பகுதிகளில் தான் எத்தனை வகையிலான பரோட்டாக்கள்….! மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள் காணப்படுகின்றன..

அப்படியே கொஞ்சம் கீழே வந்தால், இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை பரோட்டா காணப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் கிடைக்கின்றன.

பல பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த எல்லா வகையான பரோட்டாக்களும் கிடைக்கின்றன. ஏன் ஒரு சின்ன ஹோட்டலிலும் கூட குறைந்தது மூன்று வகையான பரோட்டாக்கள் கிடைக்கின்றன.. நாம் விரும்பி சாப்பிடும் இந்த பரோட்டா ஆரோக்கியமானது தானா?

மைதா என்பது என்ன?

இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை’ என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டதல்ல…

வேதிப்பொருட்கள்

மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா.

தடை செய்யப்பட்டது!

மாவை பிளீச் செய்யப் பயன்படும் பென்சாயில் பெராக்சைடு வேதிப்பொருளுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது.

நார்ச்சத்து இல்லை!

இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாகாது.

பென்சாயில் பெராக்ஸைடு

பென்சாயில் பெராக்ஸைடு’ என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். “அலாக்ஸான்’ என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் “அலாக்ஸான்’ கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

நீரிழிவு

இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது. இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது.

கொழுப்பு படிதல்

மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த நோய்களுக்கு காரணம்

தமிழகத்தில் விலை குறைவு என்பதால் “பரோட்டா’ உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, “பரோட்டா’ சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

விலங்குகளுக்கான உணவு?

மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.

மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.

பரோட்டா மட்டுமல்லாமல் அதற்கு ஊற்றப்படும் குழம்பில் அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.எனவே கவனம் அவசியம்.

மவுசு!

எந்த உணவகத்துக்குச் சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஹோட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து தன்னிச்சையாக வெளிவரும் வார்த்தை அதுவாகத்தான் இருக்கும். ஜி.ஸ்.டி இல்லாத சிறிய ரோட்டோரக் கடைகள் முதல் ஜி.ஸ்.டி வரி விதிக்கப்படும் ஹோட்டல்கள் வரை, அனைத்திலும் மெனுக்களிலும் இதற்கு தனித்துவமான ஓர் இடம் நிச்சயம் உண்டு. வரி இருக்கிறதோ, இல்லையோ இவற்றின் விற்பனையில் குறைவிருக்காது. பரோட்டா சுவைக்கு மயங்காதவர்கள் எவருமில்லை; அனைவருக்கும் பிடித்த ரெசிப்பியும்கூட. காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பல கடைகளில் இவை கிடைக்கும். காரணம் இவற்றின் மீது நம் மக்களுக்கு இருக்கும் தீராத மோகம்.

மைதா

கேக், நாண், பிஸ்கட், ரொட்டி வகைகள், சிற்றுண்டிகள், பிரதான உணவுகள்… என அனைத்திலும் இன்றைக்கு மைதாவின் ஆதிக்கம் இருக்கிறது. `கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் ‘பிளீச்’ செய்யப்பட்டு, இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்’ என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்’. பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொற்றா நோய்கள்

இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கொடிய நோய்களை எல்லாம் குணப்படுத்த கூடிய மருத்துவ குணம் முள்ளங்கிக்கு உண்டு என ?

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல் -தெரிந்துகொள்வோமா?

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு

nathan

கோடையில் தவிர்க்க வேண்டிய உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பாலும்… வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா?…

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan