33.3 C
Chennai
Saturday, May 18, 2024
2 egg yolk
ஆரோக்கிய உணவு

ஆப் பாயில் முட்டை விரும்பியா நீங்கள்? இதை படியுங்கள்

உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம்.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஆப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை.

ஆப் பாயில் முட்டை எந்த அளவுக்கு ஆரோக்கியமானது?

முட்டையின் மஞ்சள் கரு அரை வேக்காட்டுடன் இருப்பதால் அரை வேக்காடு முட்டை நல்ல ஆரோக்கியத்தை தரும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள்.

ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும்.

குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனி வேண்டுமா?

அப்படியானால் அரை வேக்காடு முட்டையே சிறந்தது. அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை உங்கள் கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொறித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.

பெண்களுக்கு தினமும் 700 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் தேவைப்படுகிறது. இதுவே ஆண்களுக்கு என்றால் 900 மைக்ரோ கிராம் ஆகும். ஒரு அரை வேக்காடு முட்டை உண்ணுவதால் கிட்டத்தட்ட 74 மைக்ரோ கிராம் கிடைத்துவிடுகிறது.

அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

Related posts

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!தெரிஞ்சிக்கங்க…

nathan

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

nathan

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

nathan

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

nathan

பப்பாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

nathan

கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ!

nathan

என்ன தெரியுமா சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…?

nathan

அவசியம் படிக்க..கேன்சர் வராமல் இருக்க இந்த உணவுகளை உண்ணாதீர்!

nathan

அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan