25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
mediterranean chickpea
ஆரோக்கிய உணவு

ஹெல்த் ஸ்பெஷல்! உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை சாலட்

பொதுவாக சாலட் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய சாலட் ரெசிபிக்களில் நிறைய உள்ளன. அவை அனைத்தும் சுவையைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு கொண்டைக்கடலைக் கொண்டு செய்யக்கூடிய சாலட் ரெசிபியானது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெசிபியில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதுடன், வயிற்றினை நிறைக்கும். சரி, இப்போது அந்த கொண்டைக்கடலை சாலட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை – 1 கப் (வேக வைத்தது)

வெங்காயம் – 1/2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

குடைமிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

புளி சாறு – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

சாட் மசாலா – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் உப்பு தூவி கிளறி விட வேண்டும்.

பின்பு சாட் மசாலா மற்றும் புளி சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கொண்டைக்கடலை சாலட் ரெடி!!!

Related posts

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்

nathan

பழங்களின் மருத்துவ குணங்கள்

nathan

தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மை

nathan

வீட்டு பக்கத்திலேயே வளரும் கீரை! 10 நோய்களை அடித்து விரட்டும் அற்புதம்

nathan

கீரையில் என்ன இருக்கு?

nathan

அப்ப உடனே இத படிங்க… பேலன்ஸ்டு டயட்

nathan

சுவையான மசாலா இடியாப்பம்

nathan

உங்களுக்கு தெரியுமா இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் ?

nathan