தினமும் பூண்டை சாப்பிடுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இப்பொழுது நாம் பூண்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி காண்போம்.
பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
பூண்டை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பூண்டை சமைக்கும் போது அதில் உள்ள அலிசின் என்ற சத்து அழிந்துவிடும். எனவே பூண்டை பச்சையாக கடித்து சாப்பிட்டாலோ அல்லது இடித்து சாப்பிட்டாலோ அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
பூண்டில் ஒரு அடர்த்தியான வாசனை ஏற்படும். சிலருக்கு இந்த வாசனை பிடிக்கவே பிடிக்காது. அதனால் பூண்டின் மருத்துவ குணம் அடங்கிய மாத்திரையை சாப்பிடுவர். ஆனால் பூண்டை நேரடியாக சாப்பிடும் சத்துக்கு இந்த மாத்திரை ஈடாகாது. அதனால் மாத்திரை, பவுடர், பேஸ்ட் போன்ற வடிவத்தில் சாப்பிடாமல் நேரடியாக பூண்டு சாப்பிடுவது நல்லது.
பாஸ்பரஸ் கேஸ் பூண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே, தான் பூண்டில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறது. அவ்வாறு நாற்றம் ஏற்படும் போது பூண்டை நம்மால் பச்சையாக சாப்பிட முடியாது. அதனால் பூண்டை லேசாக சுட்டோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் அதில் உள்ள கெட்ட நாற்றம் முழுமையாக அகலும்.
பூண்டை சாப்பிடக்கூடாத முறை
எனவே, 2 அல்லது 3 மட்டுமே சாப்பிட வேண்டும். இதனை நேரடியாக சாப்பிடுவதை விட குழம்பு, ரசம் போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.
பூண்டில் அதிக சத்துக்கள் இருந்தாலும் அதனை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்ள கூடாது.
பூண்டை தோள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டால் அதன் கெட்ட வாசனை அகலும்.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. காலை உணவுக்கு பின்பு பூண்டு சாப்பிடுவது நல்லது.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது சிலருக்கு அலர்ஜி, செரிமான கோளாரு, வயிற்றுப்போக்கு, வாந்தி என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.