29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
24 3 w
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அவை ஒருவருக்கு தேவையான உடல் எடையைப் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த பழங்களை உடல் எடையை குறைக்கத் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இந்த பழங்களானது ஒருவரின் உயரத்திற்கு தேவையான உடல் எடையைப் பெறவும் உதவியாக இருக்கும். இங்கு உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இவற்றை உடல் எடையை குறைக்க நினைப்போர் சாப்பிடக்கூடாது. ஆனால் உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு இது ஒரு அருமையான பழம்.

உலர் பழங்கள்

உலர் பழங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள். ஆனால் இவற்றை எடையைக் குறைப்போர் டயட்டில சேர்க்கக்கூடாது.

மாம்பழம்

உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு கோடைக்காலம் தான் சிறந்தது. ஏனெனில் பழங்களின் அரசனான மாம்பழமானது கோடையில் விலை மலிவில் அதிகம் கிடைக்கும். இந்த மாம்பழத்திலும் கலோரிகள் எண்ணற்ற அளவில் உள்ளது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சப்போட்டா

சப்போட்டாவிலும் கலோரிகள் வளமாக உள்ளது. இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், ஒவ்வொரு பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம். ஆனால் இதனை அவ்வப்போது சாப்பிட்டால், எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.

அத்திப்பழம்

அத்திப்பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு பழத்தில் 111 கலோரிகள் இருக்கும். எனவே எடையை குறைக்க நினைப்போர் இதனை டயட்டில் சேர்க்கவேக்கூடாது. ஆனால் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு, இது ஒரு சூப்பரான பழம்.

அவகேடோ

எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5 பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது.

Related posts

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும்?

nathan

நீரில் இதை 2 சொட்டு கலந்து பாதங்களை ஊற வையுங்கள்….சூப்பர் டிப்ஸ்

nathan

எடையைக் குறைப்பது எளிது! உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறி, பழங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா…?

nathan

‘இத’ சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

nathan

உங்களுக்கு வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமா உணர்றீங்களா!! இதை முயன்று பாருங்கள்!!

nathan

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

nathan