25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
22
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!!

கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அத்தகைய மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவை பல்வேறு கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். ஆய்வுகள் பலவற்றிலும், மீனை உட்கொண்டு வந்தால், அவை இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்று சொல்கிறது. இதுபோன்று மீனானது இதயத்திற்கு மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.

இங்கு மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, இனிமேல் வாரம் ஒருமுறை தவறாமல் மீன் சாப்பிட்டு வாருங்கள்.

ஆஸ்துமா

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

மூளை மற்றும் கண்கள்

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச் செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. எனவே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர்.

புற்றுநோய்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால், பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது. அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கம் குறையும்.

ஞாபக மறதி

வயதாக ஆக வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம்.

மன இறுக்கம்

பொதுவாக மன இறுக்கமானது மூளையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டின் அளவு குறைவதினால் ஏற்படும். ஆகவே மீனை அதிகம் உட்கொன்டு வந்தால், மூளைக்கு வேண்டிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, மன இறுக்கம் ஏற்படாமல் இருக்கும்.

கொலஸ்ட்ரால்

மீன் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

நீரிழிவு

நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

பார்வைக் கோளாறு

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்களுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும்.

குறைப்பிரசவம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடக்கூடாது. அதற்காக அவற்றை சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. மாதம் ஒரு முறை அளவாக கர்ப்பிணிகள் மீன் சாப்பிட்டு வந்தால், குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதய நோய்

ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் உட்கொண்டு வந்தால், இதயம் சீராக இயங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும்.

ஆர்த்ரிடிஸ்

வலியுடைய மூட்டு வீக்கம் உள்ளவர்கள், மீனை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பொலிவான சருமம்

மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறைவது மட்டுமின்றி, அந்த பிரச்சனைகளால் பொலிவிழந்து காணப்பட்ட சருமமும் பொலிவோடு காணப்படும்.

Related posts

சுவையான ஸ்பெஷல்: பாசுந்தி

nathan

உங்களுக்கு அதிமதுரம் தேநீர் தயாரிப்பு முறையும், அதனை குடித்தால் உண்டாகும் 5 மருத்துவ நன்மைகள் தெரியுமா?

nathan

சுவையான மட்டன் கீமா கட்லெட்

nathan

Fast Food உணவுகள் உங்கள் உடலை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

Health benefits eating methi seeds- வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

ருசியான பஞ்சு போல் இட்லி வேண்டுமா?

nathan