37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
625.500.560.350.160.300.0 1
மருத்துவ குறிப்பு

ஒற்றை தலைவலியால் அவஸ்தையா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

நாம் அனைவருக்கும் அன்றாட வேலைகளை அவசர அவசரமாக செய்வதாலும், வேலைபளு அதிகம் இருப்பதாலும் நமக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை வருகிறது.

இந்த ஒற்றைதலைவலி நம்மை பாடாய் படுத்தி விடும். கண்ணை மூடி கண் திறந்தாலே என்னவோஉலகமே சுற்றுவது போல நமக்கு இருக்கும்.

சில நேரங்களில் நமக்கு வாந்தி, மயக்கமும்கூட வந்துவிடும். இப்படி இந்த தலைவலியால் அவஸ்தைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்தெரியுமா? நாம் வாழும் இந்த வாழ்க்கை முறையும், நாம் உட்கொளும் சில உணவு முறைகளும்,அணியும் ஆடைகள் தான்

கோபம், மன அழுத்தம், பதற்றம், அதிக நேர பயணம், தூக்கமின்மை, மதுபானம், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றால் கூட நமக்கு ஒற்றைத்தலைவலி வரும்.

அதிக வெளிச்சம், கால நிலை மாற்றம், புதிய மருந்து எடுத்துக்கொள்ளும் போது கூட ஒற்றை தலைவலி நமக்குவருவதுண்டு.

ஒற்றை தலைவலியிலிருந்து விரைவில் குணமடையசில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்

எலுமிச்சை தோல்

  • எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து, அதனை அரைத்து நெற்றியில்போட்டால் சட்டென ஒற்றைத்தலைவலி சரியாகும்.

கட்டு கட்டுதல்

  • குளிர்ந்த தண்ணீரில் ஒரு துணியை நனைத்து, கழுத்து மற்றும் நெற்றியில் கட்டு கட்டினால் ஒற்றை தலைவலி குணமாகும். இது ஒரு நல்ல மருத்துவ முறையாகும்.

ஒத்தடம் கொடுத்தல்

  • கை மற்றும் கால்களை சுடு தண்ணீரில் வைக்கலாம். இப்படி செய்தால் ஒற்றை தலைவலிமறையும். அல்லது வெதுவெதுப்பான நீரில் தலையில் ஒத்தடம்கொடுக்கலாம். இப்படி செய்து வர ஒற்றை தலைவலி காணாமல் போகும்.

தலைக்கு மசாஜ்

  • அமைதியான அறையில் அமர்ந்தவாறு, தன் கைகளை கொண்டு உச்ச தலையில் மெதுவாக சுழற்சி முறையில் மசாஜ் செய்து வந்தால் கூட ஒற்றை தலைவலி பறந்து போகும்.
  • வேறு ஒருவர் உங்கள் உச்சத்தலையில் மசாஜ் செய்தால் கூடஒற்றை தலைவலி சரியாகும்.

மன அழுத்தம் குறைத்தல்

  • மன அழுத்தம், கோபம், பதற்றம் மற்றும் அதிர்ச்சி போன்ற ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் ஒற்றைத்தலைவலியிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

தேவையான தூக்கம்

  • தேவையான நேரத்திற்கு நன்றாக தூங்கினால் ஒற்றைத்தலைவலி வருவதை தடுக்கமுடியும்.
மருந்துகளை தவிர்த்தல்
  • பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை மற்றும் மருந்துகள் போன்றவற்றை தவிர்த்தால் தலைவலியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  • ஒற்றை தலைவலியை மாத்திரையால் குணப்படுத்த முடியும், ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி மாத்திரையை பயன்படுத்தவே வேண்டாம்.
  • தலைவலி ஏற்பட்டால் அமைதியான இடத்தில் ஓய்வெடுக்க வேண்டும். சத்தம் இல்லாத அல்லது இருட்டான அறையில் முடிந்தளவு சிறிது நேரம் தூங்கினால்உங்களுக்கு ஒற்றைத்தலைவலி உங்களிடம் அண்டாது.

Related posts

மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம்

nathan

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் பழக்கவழக்கங்கள்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைக் குறிவைக்கும் `டிப்தீரியா’… அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள்!

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையா? கவலை வேண்டாம்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

nathan

உங்களுக்கு சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?இத படிங்க!

nathan

ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்

nathan

‘கொர்ர்ர்ர்’ ருக்கு குட்பை!

nathan

நம்மை காக்கும் இம்யூனிட்டி! – ஹெல்த்தி வழிகாட்டி

nathan