28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
13 pregnancy
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மருந்துகளின் உதவியின்றி எளிதில் கருத்தரிக்க சில வழிகள்!!!

அக்காலத்தில் எல்லாம் பெண்களால் பல குழந்தைகளை எளிதில் பெற்றெடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான்.

ஆனால் அத்தகைய மருந்துகளில் உதவியின்றியும் இக்காலத்தில் எளிமையாக கருத்தரிக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். என்ன தான் கடைகளில் நாவிற்கு சுவையை தரக்கூடிய வகையில் உணவுப் பொருட்கள் விற்கப்பட்டாலும், அதனை வாங்கி உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தாலேயே, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுடன், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கலாம்.

இங்கு எந்த ஒரு மருந்துகளின் உதவியின்றியும் எளிதில் கருத்தரிப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கருத்தரிக்கலாம்.

ஆரோக்கியமான டயட்

கருவளத்தை அதிகரிக்க, தம்பதிகள் இருவரும் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். அதிலும் பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள் என அனைத்தையும், அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மீனையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

யோகா

தற்போது மன அழுத்தம் தான் பலரையும் வாட்டி வதைக்கிறது. மேலும் மன அழுத்தமே கருத்தரிக்க பெரிதும் தடையை ஏற்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா செய்து வர வேண்டும். இதனால் மனம் அமைதி அடைவதுடன், விரைவில் கருத்தரிக்கவும் முடியும்.

ஊட்டச்சத்துப் பொருட்கள்

உடலில் வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் போதிய அளவில் இல்லாவிட்டாலும், கருத்தரிக்க முடியாமல் போகும். எனவே வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் எடுத்து வாருங்கள். அதிலும் ஃபோலிக் ஆசிட்டை தவறாமல் எடுத்து வந்தால், கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பிறக்கும்.

பழக்கவழக்கங்கள்

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் தம்பதிகளுக்கு இருந்தால், உடனே அவற்றை நிறுத்த வேண்டும். மேலும் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களான காபி, டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது. இப்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், உடலில் பல பிரச்சனைகள் ஆரம்பமாகி, பின் கருப்பையில் சிசு தங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே கருத்தரிக்க நினைக்கும் முன், தம்பதிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையான நல்ல உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பது, உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுவது என மேற்கொண்டு வர வேண்டும்.

Related posts

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை!தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் புளி

nathan

PCOS எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபஞ்சரில் தீர்வு!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கலால் பெரும் அவதியா? இதனை தீர்க்க இந்த பழம் ஒன்றே போதும்

nathan

நிம்மதியாக உறங்குவது எப்படி?

nathan

ஒவ்வாமைப் பரிசோதனைகள்

nathan

கொரோனாவில் மீண்டவர்கள் பூஞ்சை தொற்று உருவாகும் அபாயம்.. கண்களில் கவனம்!

nathan

உங்களுக்கு அல்சர் வலியால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!…

nathan

உங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது என தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan