மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது? அதை சரிசெய்வது எப்படி?

ஒவ்வொரு மனிதருக்கும் கண் இந்த உலகத்தில் நடக்கும் காட்சிகளை தெளிவாக காட்டுகிறது. மேலும் மனிதர்களுக்கு இயல்பாகவே எந்த ஒரு பொருளும் இருக்கும் போது அதன் அருமை தெரியாது.

மாறி வரும் கால கட்டத்தில் 4 வயது குழந்தைகள் கூட கண்ணாடி போட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. 35 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 60% பேர் கண் பார்வை குறைவடைகிறது.

இதற்கு முக்கிய காரணம் நமது பழக்க வழக்கங்கள் மட்டுமே. மரபணு மற்றுமொரு காரணமாக அமைகிறது. கண் பார்வை குறைபாட்டிற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

அதிக நேரம் திரையை பார்த்தல்

மொபைல், டிவி, லேப்டாப் போன்றவற்றின் திரையை தொடர்ந்து 400 நிமிடங்கள் பார்க்கும் போது கண் பார்வை பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை நீங்கள் எளிதாக சரி செய்து கொள்ளலாம். 20 நிமிடம் திரையை பார்த்தால் சிறிது தூரம் நடந்து விட்டு பின்னர் தொடரலாம். அல்லது 20 நொடிகள் கண்களை மூடுவதன் மூலம் ரெட்டினா சிரமத்திற்குள்ளாவதை தடுக்கலாம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

காண்டக்ட் லென்ஸ் அணிதல்

அதிக நேரம் காண்டக்ட் லென்ஸ் அணிகிறீர்களா? இதனால் கண்களில் அதிகப்படியான வறட்சி ஏற்படக்கூடும். அழுக்கு மற்றும் தூசிகள் எளிதில் காண்டக்ட் லென்ஸில் படியும். இது கார்னியாவை பாதித்து பார்வையை மங்கலாக்கிடும். இதற்கு சிறந்த மாற்று கண்ணாடி அணிவது தான்.

கார்னியா

கார்னியாவில் சிறு கீரல் விழுந்தாலும் பார்வை திறன் குறைந்து விடும். தெரியாமல் நகத்தினால் கீறல் ஏற்பட்டாலோ காயாம் ஏற்பட்டாலோ கண்ணில் வலி, தொடர்ந்து உறுத்தல் தொடர்ந்து இருக்கும். கண் சிகப்பாக இருக்கும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பத்தின் போது சிலருக்கு பார்வை இரண்டாக தெரியும். கர்ப்பத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் கண்ணின் பின்பகுதியில் சுரக்கும் திரவத்தில் மாறுபாடு ஏற்பட்டு இந்த பிரச்சனை ஏற்படும். குழந்தை பிறந்ததும் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

மாத்திரைகள்

அலர்ஜி, இரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றிற்காக அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டால் உங்கள் கண்ணீர் சுரப்பு முற்றிலும் குறைகிறது இதனால் வறட்சி ஏற்பட்டு கண் பார்வை மங்குதல், வலி, சிவந்து போதல் ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

கண்களில் அழுத்தம்

கண் பார்வை நரம்புகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் பார்வையை பாதிக்கும். இதற்கு க்ளாகோமா என்று பெயர். ஆரம்பத்திலே கண்டறிந்தால் பார்வை இழப்பை முற்றிலும் தவிர்க்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button