27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
625.500.560.350.160.3 2
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… காய்கறிகளை வாங்கும்போது கட்டாயம் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்..

பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது பெரும்பாலும் மொத்தமாக வாங்கி விடுவோம்.

இவற்றில் பல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. நமது வீடுகளில் உள்ள பல விஷயங்களிலும் அப்படி தான். வீட்டிற்கு வாங்கும் பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம்.

அவ்வாறு வாங்க விடில் அவை நமது ஆரோக்கியத்தை தான் நேரடியாக பாதித்து விடும். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

இல்லையெனில் நமது ஆரோக்கியம் தான் முற்றிலுமாக பாதிக்கப்படும். கடையில் காய்கறிகளை வாங்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாங்காய்
பலர் மாங்காயை வாங்குவதற்கு பதிலாக மாம்பழத்தை வாங்கி விடுவோம். எப்போதும் அழுத்தி பார்த்தே பழங்களை வாங்க வேண்டும். மேலும், மேலும், சிவப்பு நிறத்தில் இருந்தால் அவை பழத்துள்ளது என அர்த்தம் கிடையாது.

கேரட்
பொதுவாக மண்ணிற்கு அடியில் விளைய கூடிய காய்கறிகளை நாம் வாங்கினால் அவற்றின் வெளி தோற்றத்தை வைத்தே நல்ல காயா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம். முக்கியமாக அதன் தோல் பகுதி மிகவும் வறண்டு காணப்பட்டாலோ அல்லது வெடி வெடிப்பாக இருந்தாலோ அவை பழைய காயாகும்.

கத்தரிக்காய்
பொதுவாக கத்தரிக்காயை வாங்கும் போது அவற்றின் அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். மேலும், அவை மிகவும் முத்தி இருக்க கூடாது. அப்போது தான் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தை வாங்கும் போது அவற்றின் மணத்தை வைத்தே நம்மால் அறிந்து கொள்ள முடியும். வெங்காயம் வாங்கும் போது அதிக வாசனை வந்தால் அவை விரைவில் அழுகி போய் விடும் என்பதை குறிக்கின்றன. எனவே, வாங்கும் போது வெங்காயத்தின் வாசனை மிகவும் முக்கியம்.

அவரை
இதனை பொதுவாக நாம் வாங்கும் போது பெரிதாக எதையும் கவனிக்க வேண்டியதில்லை. ஆனால், கருப்பு நிறத்தில் இருந்தால் அவற்றை பூச்சி அரித்துள்ளது என்று அர்த்தமாம். மேலும், வெள்ளை நிறத்தில் அதன் மீது இருந்தால் அதனை கண்டு கொள்ள வேண்டியதில்லை.

வாழைக்காய்
வாழைக்காயை தட்டி பார்த்து வாங்க வேண்டும் என தளபதி விஜய் ஒரு படத்தில் கூறுவார். ஒரு புறத்தில் இது உண்மையும் கூட. வாழைக்காயை தட்டி பார்த்து வாங்கினால் நல்லது. அவ்வாறு தட்டி பார்க்கும் போது அவை காயாக உள்ளதா? இல்லை பழமாக உள்ளதா? என்பதை உணர முடியும்.

பீட்ரூட்
பீட்ரூட்டின் மீது அதிக வெடிப்புகள் இருந்தால் அதனை வாங்காதீர்கள். மேலும், இது இதன் தோல் பகுதி வறண்டு இருந்தால் இவை பல நாட்களாக விற்கப்படாமல் இருக்கும் காய் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

nathan

உளுந்து சப்பாத்தி

nathan

சத்தான ஸ்நாக்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல ஹைட்டாகலாம்!!

nathan

குறைந்தது 50 வயது வரை உயிருடன் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள்!!!

nathan

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

nathan

உங்களுக்கு தெரியுமா இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் ?

nathan

உடல் நலன் காக்கும் குடம் புளி

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி

nathan