24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
heartpain
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும்.

டோபிவாலா நேஷனல் மருத்துவ கல்லூரி மற்றும் BYL நாயர் சாரிட்டபில் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் அஜய் சௌரசியா கூறுகையில், “பொதுவாக நெஞ்சுவலி தொடர்பான வழியை ரெஸ்டோஸ்டேர்னல் என்று அழைப்போம். அதாவது மார்பெலும்புக்கு பின்னால் ஏற்படும் வலி. மேலும் அசிடிட்டியால் இதய எரிச்சலும் ஏற்படும்.”

நெஞ்சு வலிக்கான இயல்பில்லாத சில அறிகுறிகளை வல்லுனர்கள் நமக்காக தெரியப்படுத்தியுள்ளனர். இதனை படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

தொடர்ச்சியான ஏப்பம்

இதனை வாய்வு பிரச்சனை என நாம் தவறுதலாக புரிந்துக் கொள்வோம். ஆனால் ஏப்பம் வரும் போது, அதுவும் நடக்கும் போது, அது நெஞ்சு வலிக்கான அறிகுறியாக இருக்கலாம். நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு குடலுக்கும் வயிற்றுக்கும் இரத்தம் பரவுவதாலே இது ஏற்படுகிறது.

பல் ஈறு மற்றும் பற்களில் நீடிக்கும் வலி

பல் ஈறு வியாதிகள் இருப்பவர்களுக்கு சாதாரணமானவர்களை விட நெஞ்சு வலி வருவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கு காரணம் பல் ஈறுகள் நோய்களை ஏற்படுத்தும் அதே பாக்டீரியா தான் உடலிலும் அழற்சியை உருவாக்கிறது. இதனால் இரத்தக் குழாய்கள் பாதிப்படைகிறது. அதனால் நெஞ்சில் ஏற்படும் வலி வாய் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்.

படுக்கையில் குறைபாடு

இரத்தத்தில் அளவு கடந்த கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்றவைகளை தவிர உங்கள் இதயம் பலவீனமாக இருந்தாலும் கூட, உங்களால் தாம்பத்யத்தில் சரிவர செயல்பட முடியாது. தன் ஆணுறுப்பில் இரத்தம் ஏறும் போது தான் அதி விறைப்பு நிலையை அடைகிறது. அதனால் இரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால், இந்த விறைப்பு நீடிப்பதில்லை. அதனால் தாம்பத்ய குறைபாடு இருந்தாலும், அது இதய பிரச்சனையாகவும் இருக்கலாம். இரத்த உறைகட்டி ஏற்படுவதால், ஆர்டெரி இருக்கும். ஆணுறுப்பில் இருப்பதை போன்ற சிறிய ஆர்டெரிகள் தான் முதலில் உறையும். இரத்த உறைகட்டி ஏற்படும் போது ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் குறைந்து அது விரிப்பை தடுக்கும்.

சோர்வு

நாள் முழுவதும் சோர்வாக உள்ளதா? நடப்பது, படி ஏறுவது, வாகனம் ஓட்டுவது, காய்கறி கூடையை சுமப்பது போன்ற எளிய வேலைகள் செய்வதற்கு கூட கடினமாக உள்ளதா? அப்படியானால் உடனே இதய மருத்துவரை அணுகுங்கள். இதயத்தில் இருந்து உடலில் பிற இடங்களுக்கு குறைவாக இரத்தம் சென்றாலும் இது ஏற்படலாம்.

உணவுக்கு பின் நெஞ்சு வலி

உணவருந்திய பின், குடலுக்கு அதிக இரத்த ஓட்டம் இருக்கும். அப்போது தான் உணவு செரிக்க சுலபமாக இருக்கும். அதனால் இதயத்தில் இருந்து, குடலுக்கு இரத்தம் செல்லும் போது, இதயத்தில் அடைப்பு இருந்தால் நெஞ்சு வலி ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக வியர்ப்பது

உங்கள் இதயத்துடிப்பு சீராக இல்லை என்று நீங்கள் உணர்ந்தால் அது சீர்கேடான இதயத்துடிப்பாகும்.

மயக்கம், மூச்சடைப்பு

நெஞ்சு வலி இல்லாத திடீர் மயக்கம், தலை சுற்றுதல், மூச்சடைப்பு. இது பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும்.

பொதுவான அறிகுறிகள்

நெஞ்சு மற்றும் இடது கையில் வலி ஏற்படும். இதற்கு காரணம் அதே முதுகுத்தண்டு சார்ந்த பகுதி தான் இதயத்திற்கும் மேல் கைக்கும் இரத்தத்தை அனுப்புகிறது.

  • boldsky

Related posts

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை! இதை முயன்று பாருங்கள்!..

nathan

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்கும் வீடுகளின் உள் கட்டமைப்பு

nathan

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம்

nathan

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

nathan

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு. Chronic Kidney Disease -Dr.திவாகரன் சிவமாறன்.

nathan

ஆதிகாலத்தின் ரகசியம் இதோ…ஆண் குழந்தை வேண்டுமா?…

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

வயிறு கோளாறுகளை நீக்கும் ரோஜா ‘குல்கந்து’

nathan

இயற்கையை காப்பாற்ற உங்களால் முடிந்த இந்த செயல்களை பின்பற்றலாமே!!!!

nathan