24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.80 19
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…காய்கறிகளை சுத்தம் செய்து நீண்டநாள் பிரிட்ஜில் Store செய்வது எப்படி?

நீங்கள் வாங்கும் அனைத்து காய்கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் வினிகர் சேர்த்து 10 நிமிடம் ஊறவையுங்கள்.

ஊறவைத்த காய்கறிகளை எடுத்து சுத்தமான நீரில் ஒருமுறை கழுவி கிச்சன் டவலில் உலரவைத்து தனித்தனியான நெட் பேகில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

இஞ்சியை மட்டும் தனி பாத்திரத்தில் ஊறவிடுங்கள். கறிவேப்பிலையை உருவி தண்ணீரில் கழுவி நீர் வடிந்தபின் ஒரு சிறிய பாக்சில் tissue சீட் சேர்த்து அதன்மேல் கருவேப்பிலை வைத்து மூடி போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லியை கழுவி, நீர் வடிந்தபின் நறுக்கி தனி பாக்சில் போட்டுக்கொள்ளுங்கள்.

இஞ்சியை தனி பாக்சில் வையுங்கள். வாழைக்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை பேக்கில் போடாமல் அப்படியே வைக்கலாம்.

பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவற்றை பாக்சின் அடியில் tissue சீட் போட்டு அதன்மேல் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

இவ்வாறு காய்கறிகளை சுத்தம் செய்து தனித்தனியாக போட்டு வைத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும், சமைக்கும் போது எடுக்கவும் சுலபமாக இருக்கும். காய்கறிகளும் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

Related posts

தயிர் தரும் சுக வாழ்வு

nathan

தசைகளுக்கு வலிமை தரும் 10 இயற்கை உணவுகள்!

nathan

பூவன் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

nathan

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

nathan

எலுமிச்சை தேநீர் ஆரோக்கிய நன்மை

nathan

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்து வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்? இதையும் படிங்க

nathan

பெண்களுக்கு மிகவும் உகந்த கருப்பு உளுந்து களி

nathan