பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது என்று அர்த்தம்
இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப் போய் வர வழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது.
இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப் போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.
உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சியான தகவல், உலகில் மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத் தான்.
இதயநோய் சம்பந்தன இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப்பழக்கம் தான் என்கிறார்கள்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித் திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால், அதுதான் படிப்படியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமாகிறது.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச் சதை கூட மேலும் ஒரு காரணமாகும். அதாவது நாம் ருசிக்காக உண்பது தான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.
வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறையினரிடடையே ஃபேஷனாகி விட்டது.
நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்த வகை, உணவுகள் தான் அவர்களின் மெனுவில் இருக்கும்.
அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே தெரியாமல் உண்கிறார்கள். கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தான் அவர்கள் விரும்பி ஈடுபடுகிறார்கள். கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.
இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:
1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.
2. மட்டம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு களைத் தவிர்த்து விடுங்கள்.
3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.
4. மது, புகை கூடவே கூடாது.
5. குளிர் பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.
6. நார்ச் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.
7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.
8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற் பயிற்சி, 45 நிமிட நடைப் பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.
9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.