நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள்.
இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி‘ என்று குறிப்பிடுவார்கள்.
இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பவர்கள் என்று இங்கு பார்ப்போம்.
- இவர்கள் கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.
- உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.
- இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்ய முடியுமாம்.
- இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகளாம்.
- இடது கை பழக்கமுள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படும். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குவார்கள்.
- இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
- தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வை திறன் இருக்கும்.