25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
pregnantwomancrying
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

ஒருவருக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணத்தைப் பற்றி நினைக்கும் போது, அனைவருக்கும் மனதில் முதலில் தோன்றுவது, ஒருவேளை இது பரம்பரை காரணமாக இருக்குமோ என்பது தான். ஆனால் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கு இதைத் தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் போது, முதன் மூன்று மாதத்திற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் சிசுவிற்கு உறுப்புகள் வளர ஆரம்பிப்பதால், மருத்துவர்கள் கர்ப்பிணிகளிடம் நன்கு ஓய்வு எடுப்பதுடன், கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். ஆனால் சிலருக்கு எவ்வளவு கவனமாக இருந்தாலும், கருச்சிதைவு ஏற்படும்.

இதற்கான காரணங்களைத் தான் தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அந்த காரணங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குரோமோசோம்களில் பிரச்சனை

குரோமோசோம்களில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளின் காரணமாகவும், கருச்சிதைவு ஏற்படும். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு இதுவே காரணம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

ஆம், ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் புரோஜெஸ்டிரோனின் அளவுகள் குறைவாக இருந்தால், இது கருப்பையின் வலுவை குறைத்து, சிசு கருப்பையில் தங்குவதற்கு தடையை ஏற்படுத்தும்.

நோய்கள்

நாள்பட்ட பிறப்புறுப்பு தொற்றுகள் அல்லது பால்வினை நோய்கள் இருந்தாலும், கருச்சிதைவு ஏற்படும். இதன் காரணமாகவும் பலமுறை கருச்சிதைவு ஏற்படும். எனவே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தில் குறைபாடு

நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவுடன் இல்லாவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்லத்தை தாக்கி, உடலில் நோய்களை எளிதில் தாக்கச் செய்யும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவின்றி இருந்தால், அடிசன் நோய், நாள்பட்ட மூட்டு வலி, டைப் 1 நீரிழிவு போன்றவை உடலை தாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

அசாதாரண கருப்பை

சில பெண்களுக்கு கருப்பையானது பேரிக்காய் வடிவில் இல்லாமல் வித்தியாசமான வடிவில் இருக்கும். அப்படி இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை

இன்றைய காலத்தில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். ஏனெனில் இப்போதெல்லாம் பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். இதனாலும் பல பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.

கதிர்வீச்சு வெளிப்பாடு

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக கதிர்வீச்சின் தாக்கமானது அதிகம் இருந்தால், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக ஸ்கேன் செய்தால், அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது கருவைத் தாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

Related posts

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

இந்த 6 ராசிக்காரர்கள் எப்பவும் சுத்தமாவே இருக்க மாட்டாங்களாம்!

nathan

அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்! மருத்துவர் கு.சிவராமன்

nathan

இத பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்!

nathan

ஹெல்த் ஸ்பெஷல் செம்பருத்தி பூவை தேநீர் செய்து குடிப்பதால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள்..!!

nathan

கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!…

nathan

எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை வாங்காதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் அழகு – பற்களை எவ்விதம் பாதுகாக்குவது

nathan

உங்க குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?அப்போ இதை செய்யுங்க!

nathan