முகப் பராமரிப்பு

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

ஹார்மோன் சம நிலையற்ற தன்மையாலும் பரம்பரை காரணமாகவும் சிலருக்கு தேவையற்ற முடிகள் கைகால் மற்றும் முகத்தில் உருவாகும்.

இந்த முடிகளை சிறு வயதிலேயே நாம் வளர விடாமல் மஞ்சள் பயிற்றம் மாவு ஆகியவற்றை உபயோகித்தால் வளர்ந்ததும் தேவையற்ற முடி வளர்ச்சி நின்று விடும்.

ஆனால் வளர்ந்த பின்னும் தொடர்ந்தால் அதனை தடுக்காமல் பார்லர் சென்று வேக்ஸிங் செய்வதால் இன்னும் முடி வளர்ச்சி தூண்டப்படுமே தவிர, குறையாது. இது நிரந்தர தீர்வல்ல. பின் என்ன செய்யலாம்? தொடர்ந்து படியுங்கள்.

மைதா மாவு : மைதா மாவை முகம், கைகளில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவினால் நாள்டைவில் முடி வளர்ச்சி குறைவதை தடுக்கலாம்.

கோதுமை தவிடு : கோதுமை மாவை சலித்தபின் வரும் தவிட்டைக் கொண்டு உடல் மற்றும் முகத்தில் தேய்த்து கழுவினால் விரைவில் முடி பலவீனமாகி உதிர்ந்துவிடும். முடி வளர்ச்சியும் தடுக்கும்.

பப்பாளி : பப்பாளியில் உள்ள என்சைம் இயற்கையாகவே கூந்தல் கற்றைகளை உடைக்கும் தன்மை கொண்டது. பப்பாளி சதைப்பகுதியுடன் மஞ்சள் சேர்த்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். விரைவில் முடி வளர்ச்சி குறையும்.

பிரஷ் : உலர்ந்த பிரஷைக் கொண்டு உடலில் தேயுங்கள். இவை படிப்படியாக முடி வளர்ச்சியை குறைக்கும். அதோடு தழும்புகள், மருக்களும் மறையும்.

அரிசி மாவு : அரிசி மாவு மிக திடமான முடிகளையும் அகற்றும் . அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து முடி உள்ள இடங்களில் தேய்க்கவும். 10 நிமிடங்கல் கழித்து கழுவுங்கள்.

சோளமாவு : சோள மாவும் சிறந்த முறையில் முடி வளர்ச்சியை தடுக்கும். தினமும் காலை மாலை என இரு வேளை உபயோகித்துப் பாருங்கள்.

facialhair 10 1478776604

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button