31.1 C
Chennai
Monday, May 20, 2024
10 1510317420 8
முகப் பராமரிப்பு

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!இதை படிங்க…

பனிகாலம் வந்து விட்டாலே நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த பருவ காலத்தில் வெயிலும் குளிரும் மாறிமாறி வருவதால் நமது உடலில் வறட்சி உண்டாகிறது. இதனால் முகம் வறட்சியடைந்து போகிறது. இதனால் வெடிப்புகளும் பிளவுகளும் உண்டாகின்றன.
கை, கால்கள் போன்ற இடங்களில் வெள்ளை வெள்ளையாக வெடிப்புகள் வந்துவிடும். உதடுகளும் வெடிப்பாக காணப்படும். இதனால் உங்களுக்கு அசௌகரியமான சூழல் உண்டாகும். உங்களது அழகும் குறைந்து காணப்படும். இந்த பகுதியில் உங்களது தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க பனி காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காணலாம்.

இப்படி சாப்பிடவும்
வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடிப்பது, வெதுவெதுப்பான சாப்பாட்டை சாப்பிடுவது போன்றவை மிகச்சிறந்ததாக இருக்கும். உடலுக்கு சூடு தரக்கூடிய உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கோதுமை, பாதாம், வேர்க்கடலை, பிராக்கோலி, கேரட், பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய மிளகு சேர்த்து, தினம் ஒரு சூப் குடியுங்கள்.

உடற்பயிற்சி குளிர்காலத்தில் வழக்கத்தை விட சற்று அதிக நேரம் தூங்க வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து உங்களது முகம் பொலிவாக தோன்றும்.

சோப்பு குளிர்காலத்தில் சோப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத் தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும்.

தலைக்கு.. தலைக்குக் குளிக்க செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பிலையை உலர வைத்து அரைத்த பொடியை உபயோகிக்கவும். குளிர் காலத்தில் பொடுகும் அதிகமாகும். முடி வறண்டு போகும். வேர்க்கால்கள் அடைபடும். இவற்றைத் தவிர்க்க வாரம் இருமுறை தலைக்கு குளிக்க வேண்டியது அவசியம்.

எண்ணெய் மசாஜ் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் – சம அளவு எடுத்து வெந்நீர் உள்ள பாத்திரத்தினுள் வைத்து டபுள் பாயிலிங் முறையில் வெதுவெதுப்பாக சூடாக்கி, தலை முதல் கால் வரை தடவி மசாஜ் செய்யவும். எண்ணெய் முழுக்க சருமத்தினுள் இறங்கும் அளவுக்குத் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

குளிக்க.. தலைக்கு போடுவதற்காக அரைத்து வைத்த செம்பருத்தி இலை, சீயக்காய், வேப்பில்லை கலந்து, அரைத்து வைத்துள்ள பொடியை சாதம் வடித்த கஞ்சியில் குழைத்து, மறுபடி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி, வெதுவெதுப்பான சூட்டுடனேயே தேய்த்து அலசவும். ஷாம்புவை தவிர்க்கவும். குளிப்பதற்கு எப்போதும் இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரும் வேண்டாம்.

தலைபாரம் அதிக சூடான தண்ணீரையும் தவிர்க்கவும். தண்ணீரில் சில துளிகள் யுடிகோலன் கலந்து குளிப்பது, மண்டை பாரமாக உணர்வது, தலையில் நீர் கோர்த்துக் கொண்ட உணர்வு போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். தலைக்குக் குளித்ததும், கூந்தலைக் காய வைக்கிறேன் என்கிற பெயரில் டவலால் முடியை அடிப்பார்கள் பலர். இப்படிச் செய்தால், ஏற்கனவே பனிக்காலத்தில் பலவீனமாக இருக்கும் கூந்தலானது உடைந்து, வேரோடு உதிரும்.

சருமம்… வறண்ட சருமம் மட்டும்தான் பாதிக்கப்படும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை எனத் தவறாக நினைக்க வேண்டாம். ஈரக்காற்றில் எல்லா சருமமும் வறண்டு போகும். குளித்து முடித்த உடனேயே முகம், கை, கால்களுக்கு மாயிச்சரைசர் தடவ வேண்டும்.

சரும வறட்சி நீங்க… ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து அடித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில், கடலைமாவுக் கலவை உபயோகித்துக் கழுவவும்.

எண்ணெய்! 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, சருமத்துக்கான பொடியை உபயோகித்துக் கழுவவும்.

வைட்டமின் இ ஆயில் வைட்டமின் இ எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வெதுவெதுப்பாக்கி, சருமத்தில் தடவிக் கழுவலாம்.

வெண்மை படிவம் போக.. வைட்டமின் இ எண்ணெய், வீட்ஜெர்ம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் கழுவினால், குளிர்காலத்தில் சருமத்தில் தோன்றுகிற வெண்மையான படிவங்கள் மாறும்.

உதடுகளுக்கு.. பாலாடை அல்லது கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவை அல்லது வெண்ணெய் இந்த மூன்றில் ஒன்றை தினமும் இரு வேளைகள் தடவி, மென்மையாக மசாஜ் செய்து வந்தால் உதடுகள் வறண்டு, வெடிக்காமலிருக்கும். பிங்க் நிறம் பெறும்.

கை, கால்களுக்கு… கிளிசரினும் பன்னீரும் கலந்த கலவையை இரவில் கை விரல் நகங்களுக்குத் தடவிக் கொண்டு படுக்கலாம். சிலருக்கு பனிக்காலம் வந்தாலே சேற்றுப் புண் வரும். அவர்கள் விரல்களுக்கு மட்டும் மருதாணி வைத்துக் கொள்ளலாம்.

வேப்பிலை, புதினா பனி மற்றும் மழைக்காலங்களில் வெளியே சென்று வந்த ஒவ்வொரு முறையும் வேப்பிலை, புதினா சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டியது அவசியம். தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்.

பார்லர் தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். சருமத்துக்கு மாயிச்சரைசிங் ஃபேஷியல், பட்டர் ஃபேஷியல், சாக்கோ ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல் மற்றும் வைட்டமின் இ ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.10 1510317420 8

Related posts

நீங்கள் கண்டதையும் முகத்துல தடவுறத விடுங்க… ஆப்பிளை மட்டும் இதோட கலந்து தடவுங்க… சூப்பர் டிப்ஸ்

nathan

தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

nathan

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கிடும் குங்குமப் பூ!சூப்பர் டிப்ஸ்

nathan

பிரகாசமான முகம் வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் பேஷியல்

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம் ஜொலிக்கணுமா? இந்த அற்புத பொடி பயன்படுத்தி பாருங்க

nathan

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

nathan