30.8 C
Chennai
Monday, Nov 18, 2024
doctors
ஆரோக்கியம் குறிப்புகள்

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும். எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

• 2 வயது முதல்-ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.

• 3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை.

• 18 வயதுமுதல்- ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

• 18 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.

• 30 வயது முதல்- ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை.

• 30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு இருமுறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

• 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.

• 50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.

• 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு, கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

– எனவே நீங்கள், உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.doctors 1

Related posts

30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

மாஸ்கை பாதுக்காப்பாக அணிவது எப்படி?.. என்னென்ன செய்ய வேண்டும்..

nathan

உங்களுக்கு தெரியுமா? அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்?

nathan

உங்க ராசிப்படி உங்க திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

நோய்களை குறைக்கும் நிம்மதியான உறக்கம்

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

மருத்துவர் கூறும் தகவல்கள்! சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

nathan

காலை உணவை தவிர்க்கக் கூடாது…ஏன்?

nathan

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan