26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900.
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வெங்காய டீ குடிச்சா பிபி எட்டி கூட பாக்காதாம்…! கெட்ட கொழுப்பும் கரைந்து ஓடிடுமாம்?

உலகில் எத்தனையோ வகையான டீ இருப்பது தெரியும். அதில் சற்றும் கேள்விப்படாத ஒரு வகை டீ பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

அது தான் வெங்காய டீ. ஒரு கப் வெங்காய டீயில் நிறைய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் மறைந்து இருக்கிறது.

வெங்காயம் அதிகம் சாப்பிட்டாலே வாய் நாற்றம் அடிக்கும். அதில் எப்படி டீ போட்டு குடிப்பது என்பதே பலரது கேள்வியாக இருக்கும். ஆனால், ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்றால் அதை முயற்சி பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் தற்காலத்தில் பலரிடம் காணப்படுகிறது.

வெங்காய டீ பொதுவாக இரத்த அழுத்தத்திற்கு சிறந்தது. வெங்காயத்தில் உள்ள காரணிகள், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் தவிர்த்திட உதவக்கூடியது. இந்த வெங்காய டீ போடுவது மிகவும் சுலபமானது. அதுமட்டுமல்லாது இதன் சுவையும் நன்றாக இருக்கும்.
ஒரு ஹெர்பல் டீ குடிப்பது போன்ற சுவையை கொண்டிருப்பதால் நிச்சயம் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.

வெங்காய டீயில் உள்ள சத்துக்களில் முக்கியமானது என்றால், அது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திட உதவுவது தான். வெங்காய டீ குடிப்பதனால் இதய நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்க முடியும்.

வெங்காயத்தில் உள்ள க்யூயர்செடின், உடலில் இரத்த கொழுப்பின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, கெட்ட கொழுப்பை குறைத்திட உதவுகிறது. இதனால், இதயத்தின் ஆரோக்கியத்தை பேணி காத்திட முடியும்.

அதே சமயம், வெங்காயத்தில் காணப்படும் சல்பர், இரத்தத்தை நீர்த்து போக செய்வதால் எந்த இடத்திலும் இரத்த உறைதல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

வெங்காய டீ போல பூண்டு டீயிலும் பல்வேறு நன்மைகள் இருப்பதால் அதனையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

வெங்காய டீ
வெங்காய டீ போடுவது மிகவும் சுலபமானது. தினமும் ஒரு கப் வெங்காய டீ குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்திடலாம், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடலாம்.

எனவே நிச்சயம் இதனை முயற்சி பாருங்கள்.

தேவையான பொருட்கள்
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2-3 பல்
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1-2 கப்
எலுமிச்சைச் சாறு – வேண்டுமானால்
பிரியாணி இலை அல்லது பட்டை – விருப்பப்பட்டால்
செய்முறை
முதலில் ஒன்றரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
நீர் கொதிக்கும் போது அதில், பிரியாணி இலை நறுக்கிய வெங்காயத்துடன், பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டும் நன்கு நீரில் கொதித்து, நீரின் நிறம் நன்கு மாறிய பின்னர் அடுப்பை அணைத்திடவும்.
இப்போது அந்த கலவையை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.
அத்துடன், எலுமிச்சைச் சாறு, சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் பட்டை பொடி சிறிது சேர்த்து குடித்தாலும் அருமையாக இருக்கும்.
இந்த டீயை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போடுவது உண்டு. ஆனால், இதில் வெங்காயம் தான் முக்கியமானது. இந்த டீயை தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

Related posts

தலைவலியின் வகைகள்

nathan

பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா? அப்ப இத முயன்று பாருங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் தூங்கும் முறை

nathan

அளவுக்கு மீறினால் நஞ்சு! அதுவே.. அளவாக குடித்தால்?

nathan

பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பிறப்புறுப்பில் பிரச்சனை என்று அர்த்தம்…கவனமாக இருங்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! இருமலை சரிசெய்யும் வெற்றிலை துளசி சூப்

nathan

மூளை, நுரையீரல், இதயம், சருமம்… நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்!

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

ஒருவரது உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்?

nathan