ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க, சர்க்கரை நோயை போக்க இது போதும்!

காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய்தான். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உறைப்பு தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள்.

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பலருக்கு அதையும் மீறி அதனை பற்றி எதுவும் தெரிவதில்லை.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”தொடர்புபட்ட செய்திகள்” background=”” border=”red” thumbright=”no” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மிளகாய் முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது அமெரிக்காவில். அன்றிலிருந்தே, அது மனிதர்களின் அன்றாட உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கின்றது.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அதனை 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிற்கு எடுத்துச் சென்றது முதல், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பரவலாக இது பயிரிடப்பட்டன.

மிளகாயில் மட்டும் 200 வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல் மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு என பல வண்ணங்களிலும் காணலாம். லேசான காரம் முதல் குடலே வெந்து போகும் அளவிற்கு கடுமையான காரத்தை கொண்டவைகள் இவைகள்.

அன்டி-பயாடிக் குணத்தை தவிர, இதில் பல உடல்நல பயன்களும் மருத்துவ குண நலன்களும் அடங்கியுள்ளன.

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளன.

அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. இதனால், தேவையான அளவு உணவில் சேர்த்து கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button