25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
12 15
ஆரோக்கிய உணவு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வயதானவராக மாற்ற கூடிய அன்றாட பழக்க வழக்கங்கள்…!

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். இந்த பழமொழியின் படி பார்த்தால் ஒருவரின் முக அழகை நிர்ணயிப்பது உள்ளத்தின் நல்ல எண்ணங்கள் தான். இருப்பினும், முகத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இருக்காது. இது மிகவும் இயல்பான ஒன்றே. முகத்தை அழகாக்க பல்வேறு அழகு சாதனங்களும், வீட்டு முறைகளும் இருக்கின்றன.

இந்த அழகியல் குறிப்புகள் எல்லாம் முகம் அழகாக வேண்டும் என விரும்புபவர்களுக்கே. நாம் செய்யும் அன்றாட செயல்கள் கூட நம் முகத்தின் அழகை கெடுத்து நம்மை வயதான தோற்றமுடையவராக மாற்றுமாம். இந்த பதிவில் நாம் செய்யும் எந்தெந்த செயல்கள் நம் முகத்தின் அழகை கெடுத்து வயதான தோற்றத்தை தருகிறது என்பதை பார்ப்போம்.

வினைகள் தரும் விணை..!

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மிடமே வினைபுரிய தொடங்கும். அதாவது நாம் உண்ணும் உணவு முதல் உறங்கும் பழக்கம் வரை எல்லாமுமே நம்மை சார்ந்தே நடைபெறுகின்றன. அந்த வகையில் செய்கின்ற செயல்கள் நம்மை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும். ஒரு சில செயல்கள் நம் உடல் நலத்தையும் சேர்த்தே பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சூரியனை தவிர்த்து விடுங்கள்…!

சூரிய ஒளி உடலுக்கு நல்லதுதான், என்றாலும் இவற்றில் இருந்து வருகின்ற UV கதிர்கள் இளம் வயதிலே வயதான தோற்றத்தை தர கூடியதாம். எனவே, காலை வெயிலில் மட்டும் வெளியில் செல்லுங்கள். மற்ற நேரங்களில் சன்ஸ்கிரீன் லோஷன் தடவி கொண்டு வெளியில் செல்லுங்கள்.

வறட்சி வேண்டாமே..!

முகத்தை எப்போதும் வறட்சியாக வைத்து கொள்ளாதீர்கள். இது முகத்தில் கீறல்கள், கோடுகளை ஏற்படுத்த காரணமாக கூடும். எனவே, முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ளுங்கள். அதற்காக கற்றாழை போன்ற இயற்கை மூலிகைகளை 2 நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் பூசி வாருங்கள்.

முகத்தை கழுவாதீர்கள்..!

முகத்தை வெளியில் சென்றால், தூங்கி எழுந்த உடன், முகத்தில் ஏதேனும் முக பூச்சு போட்டால் கழுவலாம். ஆனால், ஒரு சில செயல்கள் செய்யும் போது முகத்தை கழுவ கூடாதாம். குறிப்பாக தூக்குவதற்கு முன் முகத்தை கழுவ கூடாது. ஏனெனில், இவை முகத்தின் அழகு தன்மை கெடுத்து வயதான தோற்றதை தரும்.

சர்க்கரை தரும் முதிர்ச்சி…!

உங்களை முதுமையானவராக காட்டுவதில் முதன்மையான இடத்தில் இருக்கிறது இந்த சர்க்கரை. இவற்றில் விரைவிலே முதிர்ச்சி ஆக்கும் தன்மை அதிகம் உள்ளத்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.

காஃபி உங்களுக்கு நல்லதா..?

ஒரு சிலருக்கு முகத்தின் தன்மை முற்றிலுமாக மாறி இருக்கும். இதற்கு முழு காரணமும் நாம் எடுத்து கொள்ளும் உணவை பொருத்தே அமைகிறது. அதிகமாக காபி குடிப்பவருக்கு கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகம் சுரந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இதனால் விரைவிலே முதுமை வந்துவிடும்.

கொழுப்பு சேர்த்தால் என்னவாகும்..?

உணவில் இரு வகையான கொழுப்புகள் உள்ளது. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என கூறுகின்றனர். கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் செல்களை விரைவிலே சிதைவடைய செய்து, முதிர்ச்சியை தருமாம். எனவே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

உப்பு தரும் ஆப்பு..!

உணவில் அதிகமாக உப்பை சேர்த்து கொண்டால் பல்வேறு பிரச்சினைகளை தரும். ஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். இந்த அளவு அதிகரித்தால் முதுமை நிலை சீக்கிரமாகவே வந்து விடுமாம். எனவே, உணவில் சேர்த்து கொள்ளும் உப்பின் அளவு மிக இன்றியமையாததாகும்.

மது பழக்கமா…?

உங்கள் சருமத்தை முற்றிலுமாக பாதிக்க செய்யும் தன்மை இந்த மதுவிற்கு உள்ளது. மது பழக்கம் உள்ளவர்கள் மிக விரைவிலே முதுமை அடைந்து விடுவார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, மங்கிய தன்மை, சுருக்கங்கள் ஏற்படுத்தும்.

தூக்கம் தரும் நலன்..!

ஒரு மனிதனுக்கு நல்ல உணவும் நல்ல உறக்கமும் மிக அவசியமானதாகும். அதிக நேரம் தூங்கினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதே போன்று மிக குறைந்த நேரம் உறங்கினாலும் உடலுக்கு பாதிப்பை தரும். இரவு நேர தூக்கத்தின் போதுதான் ஹார்மோன்கள் நன்கு சுரக்க செய்யுமாம். நாம் இரவு தூக்கத்தை தவிர்த்தால் பாட்டி அல்லது தாத்தாவாக, கூடிய சீக்கிரத்திலே மாறிவிடுவோம்.

புகை வயதுக்கு பகை..!

புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த வயதானவர் தோற்றம், மிக சீக்கிரத்திலே வந்து விடும். புகை பழக்கம் ஆக்சிஜென் அளவை உடலில் குறைத்து விடுகிறது. இதனால் தோலின் ஆரோக்கியம் சீர்கேடு அடைந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படுமாம்.

போதுமான ஊட்டசத்து இல்லையா..?

நீங்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் போதுமான அளவு ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் உணவை சாப்பிட்டும் எந்த வித பலனும் இல்லாமல் போய் விடும். குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

வேதி பொருட்களுக்கு நோ நோ…!

இன்று எண்ணற்ற வேதி பொருட்கள் சந்தையில் வந்து குவிய தொடங்கி விட்டது. அவற்றையெல்லாம் வாங்கி முகத்தில் பூசி கொள்ளாதீர்கள். இது மிகவும் மோசமான தாக்கத்தை சருமத்தில் ஏற்படுத்தும். அத்துடன் முகத்தின் செல்களை சிதைவடைய செய்து வயதான தோற்றத்தை தருமாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Related posts

பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!

nathan

உடல்நலத்தை ஊக்குவிக்கும் இயற்கையான வழிமுறைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

அற்புத மருத்துவகுணம் நிறைந்த ஆடாதோடை…! சூப்பர் டிப்ஸ்

nathan

சுட்டீஸ் ரெசிப்பி: சத்துக்கு சத்து… சுவைக்கு சுவை!

nathan

உணவில் கேரட்டை அதிகளவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

உங்களுக்கு தெரியுமா அளவுக்கு மீறி சாப்பிட்டால் பாதாமும் நஞ்சு தான்! இத முதல்ல படிங்க..!

nathan