கருத்தரிப்பது வரை தான் ஆண்களின் வேலை, பிறகு பெற்றெடுத்து வளர்ப்பது எல்லாம் பெண்களின் வேலை என துளியளவும் கருதிவிடக் கூடாது. பதி என்பவன் கடைசி வரை தன் மனைவியை பாதுகாப்பாக வைத்துக் கொள்பவனாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பக் காலத்தில்.
கர்ப்பிணி பெண்கள் இந்த காலத்தில் தனது தாய் மற்றும் கணவனை மிகவும் எதிர்பார்ப்பார்கள். அதிலும் கணவனின் இணைப்பு மிகவும் அவசியமானது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது ஆண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை என சிலவன இருக்கின்றன. அவற்றை சரியாக செய்ய வேண்டியது கணவனின் கடமையாகும்.
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா?
இரவு
சாதாரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரவு படுத்தவுடன் உறக்கம் வராது. சற்று அசௌகரியமாக தான் உணர்வார்கள். எனவே, இரவு அவர்கள் உறங்கும் வரை அவர்களை அரவணைப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும், பேசுங்கள். இது அவர்களது உடலும், மனதும் இதமாய் உணர உதவும்.
மசாஜ்
அதே போல, தினமும் அவர்கள் அசௌகரியமாக உணரும் போது நீங்களாக அவர்களது கை, கால்கள், இடுப்பு, தோள்பட்டை பகுதிகளில் மசாஜ் போன்று செய்துவிடுங்கள். இதனால் அவர்களுக்கு இரவு நல்ல உறக்கமும் கூட கிடைக்கும்.
உறுதுணை
மருத்துவரிடம் மாதாமாதம் பரிசோதனைக்கு செல்லும் போது கண்டிப்பாக உடன் செல்ல வேண்டும். இது அவர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ளவும், உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளவும் சரியாக இருக்கும்.
ஊக்கம்
கண்டிப்பாக வளைகாப்பு நடந்தவுடன் ஒவ்வொரு நாளும், பெண்களுக்கு பிரசவத்தை பற்றிய எண்ணம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இந்த நேரத்தில் அவர்களுக்குள் அச்சமும் சற்று அதிகரிக்கும். எனவே, அவர்களிடம் அமர்ந்து ஊக்கம் அளித்து, நேர்மறையாக கொஞ்சம் பேசுங்கள். இது அவர்களுக்கு தைரியத்தை அளிக்கும்.
பிடித்தவை
உணவு, உடை, உபகரணங்கள் என கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்தவற்றை மறவாமல் வாங்கி தர வேண்டும். அதே போல அவர்களுக்கு பிடிக்காத செயல்களில் ஈடுபட வேண்டாம். கர்ப்பிணி பெண்களின் உடல்நலத்திற்கு இணையாக மனநலமும் சரியாக பேணிக்காக்க வேண்டும். இது தாய், சேய் இருவரது ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.
உரக்க பேசுதல்
கர்ப்பிணி பெண்கள் முன் உரக்க சத்தமாக பேசவேண்டாம். ஏன், டிவி, இசை போன்ற இதர சத்தங்கள் கூட குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். இது, அவர்களது மனநிலையை பாதிக்க கூடும்.
வாக்கிங்
கர்ப்பிணி பெண்கள் நடைபயிற்சி செய்தல் நல்லது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், கணவனுடன் செல்வது அவர்களது மனதிற்கும் நல்லது. இவையெல்லாம் கர்ப்பிணி பெண்களை மகிழ்ச்சியடைய வைக்கும் செயல்கள் ஆகும்.
தனிமை
எக்காரணம் கொண்டும் கர்ப்பிணி பெண்களை தனிமையாக உணர வைத்துவிட வேண்டாம். இது அவர்களது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும் செயலாகும். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் தனது தாய் மற்றும் கணவனை தான் எதிர்பார்ப்பார்கள். கணவனுடைய இணைப்பு மிகவும் இன்றியமையாதது.