28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
leo zodiac sign 600
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!

பொதுவாகவே ராசிகள் மீது பலருக்கும் அலாதி நம்பிக்கை உண்டு. குறிப்பாக இந்தியாவில் அந்த நம்பிக்கை மிகுதியாக நிலவுகிறது. காலை எழுந்தவுடன் முதலில் ராசி பலனை பார்க்கும் பழக்கமுடையவர்கள் இன்றளவும் கூட பலர் உள்ளனர். நம்முடைய குணாதிசயங்களை கூட நம் ராசி தீர்மானித்துவிடும் என நம்பப்படுகிறது.

ராசியைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். 12 மாதங்களுக்கு இணையாக மொத்தம் 12 ராசிகள் உள்ளது. உங்கள் பிறப்பின் தேதியை பொறுத்து உங்கள் ராசி தீர்மானிக்கப்படுகிறது. அனைத்திற்குமே தலைவன் என்ற ஒருவன் இருப்பதை போல 12 ராசிகளில் கம்பீரமான ஒரு ராசி உள்ளது. ஆம், அது தான் சிம்ம ராசி. சிங்கத்தை குறிக்கும் ராசியான அது எப்படி இருக்கும் என சொல்ல தேவையில்லை.

 

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன், சற்று மூர்க்கத்தனமாக இருப்பார்கள என நம்பப்படுகிகிறது. ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. சிம்ம ராசிக்காரர்களிடம் உள்ள அப்படிப்பட்ட அட்டகாசமான சில குணாதிசயங்களைப் பற்றிப் பார்க்கலாமா?

அதிக தற்பெருமை கொண்டவர்கள்

சுய கௌரவம் இல்லாத சிம்ம ராசிக்காரர்களை பார்ப்பது அரிது. சிங்க கூட்டம் என்றாலே தற்பெருமை நிறைந்த ஒன்று தானே.

தாராள மனப்பான்மையுள்ளவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்

பொருளளவிலும் சரி, உணர்ச்சி ரீதியிலும் சரி, கொடுப்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. அது பணம், காதல் அல்லது பழி உணர்வாக இருந்தாலும் சரி.

சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள்

ஆட்களாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி, சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் அருமையான விருப்பம் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் அவர்கள் சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள்.

கவர்ச்சியானவர்கள்

பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் காந்த சக்தியுடன் இருப்பதால், எங்கு சென்றாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பை பெற்றிருப்பார்கள். அறைக்குள் அவர்கள் நுழைந்தாலே மற்றவர்களின் பார்வை அவர்களை நோக்கி திரும்பும்.

நல்ல தலைவராக இருப்பார்கள்
அவர்களின் திடமான குணாதிசயம் அவர்களை நல்ல தலைவரின் இடத்தில் அமர வைக்கும். ஒரு சின்ன குழுவிற்கு தலைவனாக நியமித்தாலும் சரி, அல்லது நிறுவனத்தின் தலைவராக நியமித்தாலும் சரி, தங்களை நேர்மையுடன் பின்பற்றும் கூட்டத்தை பெற்றிருப்பார்கள்.

சோம்பேறியாக இருந்தாலும் திறமையானவர்கள்

சில சிம்ம ராசிக்காரர்கள் சோம்பேறியாக, அதுவும் தங்களின் வாலிப வயதில் இருந்தாலும், அவர்களிடம் பொறுப்புணர்ச்சி அதிகமாகவே இருக்கும். பொறுப்பை எடுத்துக் கொள்ள விருப்பப்படுவார்கள். அதே போல் திறமை வாய்ந்த வேலைக்காரர்கள் அவர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த பேச்சாளர்கள்

முக்கியமாக வலுவான அறிவுரைகளை வழங்குவார்கள். ஆம், சற்று நாடகத்தனமாக தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் வார்த்தைகளில் சத்தியம் இருக்கும்.

காதலையே காதலிப்பார்கள்

காதல் என்று வரும் போது, சிம்ம ராசிக்காரர்கள் காதலை நாடகத்தனமாக நடப்பார்கள். தங்கள் காதலை பெருமையாக எண்ணி காதலை காதலிப்பார்கள்.

மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்

மிகவும் வெளிப்படையாக இருக்கும் அவர்கள் அன்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுடன் பார்டிக்கு சென்றால் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

போட்டி என்று வந்து விட்டால் சிம்ம ராசிக்காரர்களை அடித்துக் கொள்ள முடியாது

அது கல்வி, தொழில் அல்லது விளையாட்டு என எதுவாக இருந்தாலும் சரி. முயற்சி எடுக்க அவர்கள் என்றுமே அஞ்சியது இல்லை. பரிசுக்காக போராடும் போது அவர்களிடம் போராடும் குணம் உயிர்ப்புடன் இருக்கும்.

நேர்மையானவர்கள்

நீங்கள் சந்திப்பவர்களில் மிகவும் நேர்மை மிக்கவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். உங்களுக்கு சிம்ம ராசி நண்பர் இருந்தால், அனைத்து கஷ்டத்திலும் அதற்காக அவர்கள் வாழ்க்கையையே கொடுப்பதை நீங்கள் காணலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் தீயவர்கள் அல்ல

இருப்பினும் அவர்களுடன் தகராறில் ஈடுபடக் கூடாது. காரணம் அவர்களின் கோபம் நிலையாக இருக்காது. அது அவர்கள் வழியில் செல்லும் அனைத்தையும் நாசப்படுத்திவிடும். சிம்ம ராசிக்காரர்களை கோபப்பட வைத்தால், சத்தம் போடாமல் நழுவி விடுங்கள்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! வயிற்று எரிச்சலை போக்க சில ஈஸி டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க…முகக்கவசம் அணியும் போது இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

nathan

ஆண்களே பாடிபில்டர் போன்ற உடலைப் பெற ஆசையா?

nathan

வாஸ்து படி, உங்கள் வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் உங்களுக்கு நிறைய பணம் செலவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது!….

sangika

தெரிஞ்சிக்கங்க… வீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்!

nathan

வெந்நீர் குடித்தால் வியாதிகள் ஓடும்!

nathan

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan