சிறிய தீக்காயம் ஆறுவதற்கு குறைந்தது இரண்டு வாரம் ஆகும். அதுவரைக்கும் புண் கொந்தி விடக்கூடாதல்லவா?
அதற்கு பாட்டி சொல்லிக்கொடுத்த வீட்டு வைத்தியத்தை செய்தோம். கற்றாழையை வெட்டி எடுத்து அதில் வரும் ஜெல்லி போன்ற வழவழப்பான கூலை அதன் மேல் தடவினோம். இரவு தூங்கச்செல்லும் போது மட்டும், நீரில் நன்றாக கழுவிவிட்டு, சுத்தமான பருத்தி துணி கொண்டு துடைத்து, ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டை தடவிவிட்டோம்.
இப்படி செய்து வந்தால், இயற்கையாவே சருமத்தில் வாழும் நல்ல பாக்டீரியாக்கள் மெதுவாக குணப்படுத்திவிடும். ஈரம் பட்டால் மட்டும், பருத்தி துணி கொண்டு சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்போ கொப்புளம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். புண் எல்லாம் ஆறி, தழும்பு மட்டும் தெரிகிறது. பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. இதே பெரிய தீக்காயம் என்றால், வீட்டு வைத்தியம் ஆகாது. உடனே மருத்துவமனையை நாடுவது நல்லது.