29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
ayurveda 15891
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஆயுர்வேதத்தின் படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஆயுர்வேதத்தின் படி உங்கள் உடல் மூன்று உயிரியல் ஆற்றலாக பிரிக்கப்படுகிறது. இந்த மூன்று ஆற்றல் உங்கள் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. அவை வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவையாகும். இவற்றில் உடலின் நுண்ணிய மற்றும் மிக நுண்ணிய செயல்பாடுகளுக்கு வாதம் பொறுப்பேற்கிறது.

Ayurveda For Diabetes: Diet Dos And Don’ts
செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பித்தம் பொறுப்பேற்கிறது. உடலின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு கபம் பொறுப்பேற்கிறது. கபம் மற்றும் வாதத்தின் சமநிலை குறைவதால் நீரிழிவு அபாயம் தோன்றுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேதத்தின் படி உணவில் இருக்கும் தவறுகள்:
ஆயுர்வேதத்தின் படி, வழக்கமான உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் நீரிழிவிற்கு காரணமாகிறது. கபத்தை அதிகரிக்கும் உணவுகளான தயிர் மற்றும் அதன் தயாரிப்புகள், பால் மற்றும் அதன் தயாரிப்புகள், வெல்லம், கரும்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள், அடிக்கடி உணவு உட்கொள்ளல், உட்கார்ந்த படி வேலை செய்வது, உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள் குறைவது, அதிகரித்த உறக்கம், மரபணு காரணிகள், மனஅழுத்தம், பயம் மற்றும் நாட்பட்ட உடல் கோளாறுகள் போன்றவை நீரிழிவிற்கு காரணமாகின்றன.

அதிகமாக நம்பப்படும் உணவுகள்:
லவங்கப்பட்டை

லவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதனை ஆதரிக்கும் போதிய அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.

பழுப்பு அரிசி
பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியைக் காட்டிலும் குறைந்த க்ளைசீமிக் குறியீடு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மை இல்லை. பழுப்பு மற்றும் வெள்ளை அரிசியின் உண்மையான க்ளைசீமிக் குறியீடு ஓரளவு மட்டுமே வேறுபடுகிறது மற்றும் நார்ச்சத்து போன்ற கூறுகள் காரணமாக தயாரிக்கும் போது வேறுபாடுகள் உண்டாகிறது.

சர்க்கரை இல்லாத பொருட்கள்
சில வகை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படுவதாக மற்றும் ஆரோக்கியமானதாக விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றில் உயர்ந்த அளவு கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.

செயற்கை சுவையூட்டிகள்
சில வகை செயற்கை சுவையூட்டிகளில் சுவையை அதிகரிக்கும் பொருட்கள் மற்றும் நீண்ட காலம் கெடாமல் இருக்க வைக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன . இவற்றால் நன்மையை விட தீமைகள் அதிகம். எந்த ஒரு முன்கூட்டிய அனுமதியும் இல்லாமல் சில செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. ஆகவே எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன் அதன் லேபிளை படித்து பின்பு அதனை வாங்கவும்.

கபத்தை சமநிலையில் வைக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி அரிசி, உருளைக்கிழங்கு, இனிப்பு சுவை கொண்ட பழங்கள், மைதா, கோதுமை, எண்ணெயில் பொரித்த உணவுகள், சிவப்பு இறைச்சி, ஜவ்வரிசி போன்ற உணவுகளை முடிந்த அளவிற்கு உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.7 apple 158917

மேலும் நீரிழிவு நோயாளிகள் கொண்டைக்கடலை, பச்சை பயறு, பருப்பு வகைகள், மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, சோயாபீன்ஸ், பொட்டுக்கடலை போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இனிப்பு தேடலை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
குறைவான க்ளைசீமிக் குறியீடு கொண்ட பழங்கள் எடுத்துக் கொள்வதால் இனிப்பிற்கான தேடலை கட்டுப்படுத்த முடியும். அவை ஆப்பிள், திராட்சை, பேரிக்காய், ஆரஞ்சு போன்றவை பழங்கள் ஆகும். இனிப்பு சுவைக்கான தேடல் ஏற்படும் போது ஆப்பிள் கீர் அல்லது பேரிக்காய் கீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உங்கள் பசியுணர்வு குறையலாம்.

Related posts

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல்எடை, தொப்பையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் 10 நாட்கள் இந்த பானத்தை குடிங்க!

nathan

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!

nathan

மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க!

nathan

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

40 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் எடையை குறைக்கணுமா?உங்களுக்காக டிப்ஸ்!!

nathan

டெங்கு கொசுவிடமிருந்து பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்!

nathan

பிறந்த குழந்தையை தூக்கும் முறை

nathan

குழந்தையின் தூக்கத்தைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்…

nathan