33.9 C
Chennai
Thursday, May 15, 2025
அழகு குறிப்புகள்

கவரிங் நகைகள் வாங்கும் போது

கவரிங் நகைகள் வாங்கும் போது

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம். ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு. அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது,

நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது. புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும். இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும்.

எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம். கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.

கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கறுக்காமல் இருக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ப்ளீச்சிங் செய்ய…!

nathan

யாருமே ஹெல்ப் பண்ணல! கதறி அழ வைத்த சுருதி! எங்க அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு!

nathan

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika

முகப் பொலிவு பெற

nathan

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்க,

nathan

தக்காளி ஜுஸ்வுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய்யை போக்க..

nathan

யோகர்ட் உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் மெருகூட்டும்.

nathan

கணவர் கள்ள உறவில் இருந்தா… எப்படி நடந்துப்பாருனு தெரியுமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! வியர்குரு ஏன் எதனால் வருகிறது? குணமாக்குவது எப்படி?

nathan