பூண்டு நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. நமது உணவில் தினமும் பயன்படுத்தும் பூண்டானது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி நமது உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகின்றது.
பூண்டை அதிகம் நமது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
அவையாவன:-
பூண்டில் காணப்படும் பைட்டோ கெமிக்கல்ஸ் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. பூண்டில் கணிசமான அளவில் உள்ள கந்தக கலவைகள் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு உதவுகிறது.
தினமும் இரவில் ஒரு பூண்டு உட்கொண்டால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் இது குறைக்கும்.
அத்துடன் காலையில் தேனில் நனைத்த பூண்டு உட்கொண்டுவருவதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
மேலும் இதுபோல தேன் மற்றும் பூண்டை சுமார் ஒரு மாதத்திற்கு உட்கொண்டால், இதயத்தில் அடைப்பு ஏற்படுதல் போன்ற சிக்கல்களை குறைக்க அது உதவும்.