உணவு தான் நம்முடைய முன்னோர்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டிருந்தது. ஏனென்றால் எந்த உணவை எந்த சமயத்தில் எவ்வளவு எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் நாமோ அப்படியல்ல. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நமக்கு எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் அதை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும். அதிலும் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பது பற்றி நாம் இங்கே பார்க்கலாம்.
பச்சரிசி
நம்முடைய உணவில் பச்சரிசியை அதிகமாக எடுத்துக் கொண்டால் ரத்தசோகை உண்டாகும். பெரும்பாலும் கிராமங்களில் அரிசியை சாப்பிடுபவர்களிடம் பெரியோர்கள் அரிசி சாப்பிட்டால் சோகை பிடிக்கும் என்று சொல்லக் கேட்டிருப்போம். அது மிகவும் உண்மையான விஷயம்.
வெல்லம்
வெல்லத்தை அளவுக்கு அதிகமாக விரும்பிச் சாப்பிடுபவராக இருந்தால், அது இரும்புச் சத்தை அதிகரிக்கச் செய்யும். அதேசமயம் அது குறிப்பிட்ட அளவைத் தாண்டுகிற பொழுது அஜீரணக் கோளாறை உண்டாக்கும்.
எண்ணெய் பலகாரம்
எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும்.
இஞ்சி
இஞ்சி அஜீரணத்தைப் போக்கும். சளியை வெளியேற்றும். கொழுப்பைக் குறைக்கும் என்று நம் எல்லோருக்குமு தெரியும். ஆனால் இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால் மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும்.
பழைய சாதம்
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்டாகும் தான். அது மிகவும் ஆரோக்கியமான உணவு என்று நிரூபிக்கப்பட்டது தான். அதை காலை வேளையில் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் அதேசமயம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிற பொழுது, அதிலுள்ள பாக்டீரியாக்களால் உங்களுக்கு வயிற்றுப் பொருமல் ஏற்பட்டு கை, கால் வலி ஏற்படும்.
தேங்காய்
தேங்காய் சிலர் ஆரோக்கியம் என்பார்கள். சிலர் நெஞ்சைக் கரிக்கும் என்பார்கள். இரண்டுமே உண்மை தான். தேங்காயை அளவோடு சாப்பிட்டால் அது ஆரோக்கியம். அளவுக்கு அதிகமானால் சளி, பித்தம், வறட்டு இருமல், நெஞ்சு கரித்தல் ஆகியவை உண்டாகும்.
மாங்காய்
பொதுவாக மாங்காய் சீசன் ஃபுரூட் என்பதால் கிடைக்கின்ற சமயத்தில் மட்டும் நாம் அதை நிறைய உண்டு விடுவதுண்டு. அதிலும் சிலர் தங்களுடைய எல்லா சமையலிலும் மாங்காயைச் சேர்ப்பார்கள். ஆனால் மாங்காயை அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு கட்டும் பிரச்சினை உண்டாகும். சளி அதிகமாகும். இடுப்பு வலி உண்டாகும். உடலில் பித்தமும் அதிகரிக்கும்.
கோதுமை
உடல் சூடு உள்ளவர்கள் கோதுமையை மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அதிகரிக்கும். குடல் இரைச்சல் ஏற்படும். பித்தம் கூடும்.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருப்பது நமக்குத் தெரியும். அது பசியைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு ஆற்றலைத் தரும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதுவே அதிகமாக பாதாமை சாப்பிடுகிற பொழுது, வாயின் சுவையானது மாறிவிடும் பித்தம் அதிகமாகிவிடும். வயிற்று மந்தமும் கூடும்.
முற்றிய முருங்கை
முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும். ஆனால் முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.
எருமைப்பால்
எருமைப்பால் பசும்பாலை விடவும் அதிக சுவையும் அடர்த்தியும் கொண்டது. ஆனால் எருமைப் பால் குடித்தால் (அதிகமாகக் குடித்தால்) சிறுநீரகத்தில் கல் உண்டாகும். எருமையைப் போன்று அறிவும் மங்கிவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
மிளகு
உடல் வலுவுள்ளவர்கள் மிளகை எடுத்துக் கொள்ளலாம். அது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் கழிவுகளை எரிக்கச் செய்யும். அதனால் உடலில் கச்தி அதிகமாக இல்லாதவர்கள் மிளகை அதிகமாக சாப்பிட்டால் அதன்மூலம் உடலில் வெப்பம் அதிகரிக்கும்.
மிளகாய்
மிளகாய் உடலுக்கு சூடு என்று சொல்வார்கள். அதனால் மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உடலில் சளித்தொல்லையும் அதிகரிக்கும். ஆண்களுக்கு விந்து நீர்த்துப் போகும். விந்து கெடும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
காபி
காபி குடிப்பது சுகம் தான் என்றாலும் காபி அதிகமாகக் குடித்தால் பித்தம் அதிகரிக்கும். அதன்மூலம் கை, கால் நடுங்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கண்ணெரிச்சல் அதிகரிக்கும்.
டீ
டீயில் கொஞ்சம் காஃபினைன் றைவாக இருக்கிறது என்ற நாம் நினைத்தாலும், தேநீர் குடிப்பது உடல் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் நினைத்தாலும் கூட, டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் உண்டாகும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை ஆகியவை உண்டாகும். ஆண்களுக்கு விந்துவின் வீரியம் குறையும்.
எலுமிச்சை
எலுமிச்சை கொழுப்பை குறைப்பது முதல் ஏராளமான நன்மைகளைத் தரும் என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் இதயம் பலவீனப்படும்.
உப்பு
உப்பின் அளவு அதிகமானால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டு. சிறுநீரகக் குழாய் பிரச்சினை ஏற்படும். உயிர் விந்தணுக்களைக் குறைத்து விடும்.
வெங்காயம்
வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தலைவலி அதிகரிக்கும். மந்தத் தன்மையை உண்டாக்கும். சளி பெருக்கம் ஏற்படும்.
குங்குமப்பூ
குங்குமப்பூ வழக்கமாக நாம் மிகச்சிறிய அளவே பயன்படுத்துகிறோம். ஆனாலும் தேவையற்ற சமயங்களில் அதை அதிகமாகச் சாப்பிடுகிற பொழுது, அது புத்திக்கூர்மையைச் சிதைக்கும். ரத்த சிவப்பணுக்கள் குறையும். அதன் அளவு கொஞ்சமேனும் கூடினால் அழகு கூடுவதற்கு பதிலாக அழகு கெட ஆரம்பிக்கும். ரத்தம் வெளிறிப் போகும். வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் உறுப்புகள் கோணலாகும் வாய்ப்பு உண்டாகும்.
வெள்ளைப்பூண்டு
வாயுத் தொல்லையைத் தீர்க்கின்ற பூண்டு அதிகமாக எடுத்துக் கொள்ளுகின்ற பொழுது ரத்தத்தைத் வேகமாகப் பரவச் செய்து கொதிக்க வைக்கும். அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு வயிற்றில் கரு இருந்தால் அது அழியும் வாய்ப்புண்டு. குடலை எரியச் செய்யும். ஆண் தன்மை இழக்க ஆரம்பிக்கும்.