கோடைக்கு இதம் தரும்.. தர்பூசணியின் மகிமைகள்..!!
வெயில் காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்றே பலரும் யோசிப்பர். மேலும் சிலர் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பார்கள். இவற்றை எல்லாம் குடித்தால் தேவாமிர்தம் போல் தான் இருக்கும். ஆனால், மறுபடியும் நாக்கு வறண்டு மீண்டும் உஷ்ணத்தை கிளப்பும். இதிலிருந்து தப்பிக்க வேண்டுமென நினைத்தால் தர்பூசணியை ட்ரை பண்ணுங்க…
தர்பூசணி தாகத்தை தணிப்பதில் சிறந்தது. ஏனெனில், தர்பூசணியில் 92மூ நீர்ச்சத்தும், 3.37மூ நார்ச்சத்தும் இருக்கிறது.
தர்பூசணி வயிற்று உப்புசத்தை குறைக்கும், பித்த சூட்டை விரட்டும், வயிறு எரிச்சலை குறைக்கும்.
அடிவயிற்று கோளாறுகளை சரி செய்யும்.
சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கோளாறை சரி செய்யலாம். மேலும், தர்பூசணி சிறுநீரகப்பையில் கற்கள் சேர்வதை தடுக்கிறது.
தர்பூசணியில் சிட்ரூலின் என்ற சத்து பொருள் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, தாது உப்புகள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் நியாசின் என்ற சத்து பொருளும் உள்ளது.
சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.
தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக்கூடியது.
நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
தர்பூசணி பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும். தர்பூசணி பழச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
தர்பூசணி பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். மேலும், இதய நோய்களிலிருந்தும், புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.
தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.
தர்பூசணியில் இருக்கும் சத்து பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.
இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக இயங்க செய்து இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும்.