23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1454306199 4663
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

மூட்டு வலிகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகும் பூசணிக்காய்

பொதுவாக பூசணிக்காயைப் பறங்கிக்காய் என்று சொல்வது வழக்கம். இதற்கு சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி என்று வேறு பெயர்களும் உண்டு. இது சமைத்து உண்ணும் போது சர்க்கரை சேர்த்து சமைத்தது- போல இனிமை உடையதாக இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.பறங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உடையது.  வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவல்லது. குறிப்பாக நாடாப் புழுவை வெளியேற்ற வல்லது. பறங்கிக்காயின் விதையில் துத்தநாகச் சத்து இருப்பதாலும் அது வீக்கத்தை கரைக்க கூடியதாக இருப்பதாலும் ஆண்களின் புரோஸ்டேட் கிளாண்ட் சிறுநீரக கோளாறுகளையும் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் சிறுநீரகம் சரிவர இயங்குவதற்கும் இது மருந்தாக பயன்படுகிறது.பறங்கிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், குக்குர் பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. இதன் விதைச் சூரணத்தை 2முதல் 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு சாப்பிடுவதால் சிறுநீர் எளிதாகவும் மிகுதியாகவும் வெளியறே உதவுவதோடு புரோஸ்டேட் கிளாண்ட் வீக்கத்தைத் தடுப்பதற்கும் இது உதவுகிறது.மேலும் பறங்கிக்காயின் விதைகளில் ஸ்டெரால் கிளைகோஸைட் ஸ்டெரால் அமிலக் கொழுப்பு ஆகிய வேதிப் பொருள்களும் அடங்கியுள்ளது. இது புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. பறங்கிக் கொடியின் 100கிராம் இலைகளில் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச்சத்து 36.38 கிராமும், மக்னீசியம் 38.80கிராமும், இரும்புச்சத்து 2.04மி.கிராமும் துத்தநாகச் சத்து 0.76மி.கிராமும், செம்புச்சத்து 0.42மி.கிராம் அடங்கியுள்ளது.

விதையினின்று தயாரிக்கப்படும் எண்ணெய் ஸ்டெரால்ஸ் மற்றும் டிரைடெர்ப் பினாய்ட்ஸ் என்னும் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளன.  இவை மைக்ரெய்ன் என்னும் ஒற்றைத் தலைவலி நோய்க்கும் நியூரேல்ஜியா எனப்படும் நரம்பு வலிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:

பூசணி என்னும் போது நாம் பரவலாகப் பறங்கிக்காய்க்கு பதிலாக பயன்படுத்துகிற ஓர் பொருளாகிறது. வெண்பூசணிக்கு கலியான பூசணி என்னும் பெயர் உண்டு. வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.

பூச்சிக்கொல்லியாக  குறிப்பாக வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியதாக உபயோகப்படுகிறது.-வெண்பூசணிக்காயை உலர்த்தித் தூளாக்கி உள்ளுக்கு கொடுப்பதால் சளியுடன் ரத்தம் கலந்து வருகிற சளியுடன் ரத்தம் கலந்து வருகிற நோய்க்கு நிவாரணமாகிறது.  சீன தேசத்து வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும்

வெண்பூசணி வேரை மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் கீழ்பகுதியில் அடைப்போ அல்லது எரிச்சலோ ஏற்பட்டு கடுமையான வலியையும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிற நிலையில் உபயோகப்படுத்துகின்றனர். மேலும் பிரசவித்த மாதர்களுக்கு அளவுக்கு மீறிய பால் சுரப்பால் ஏற்படும் கடடி வீக்கம் வலி போன்ற நிலையில் அதைக் கட்டுப்படுத்தவும் சீதபேதியைத் தணிக்கவும், வெண்பூசணி வேர் பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக் கொடியின் தண்டு வெந்நீரினாலோ நீரின் ஆவியினாலோ ஏற்பட்ட கொப்புளங்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது. பொதுவாகப் பூசணிக்காய் 4 முதல் 8 கிலோ எடை வரையில் காய்க்க கூடியது. பறங்கிக்காய் என்னும் சர்க்கரைப் பூசணியோ 34 கிலோ வரையில் காய்க்க கூடியது. சர்க்கரைப் பூசணியில் பீட்கரோட்டின் என்னும் மருத்துவ பொருள் செரிந்துள்ளதால் அது மஞ்சள் நிறத்தோடு விளங்குகிறது.

இயற்கை மருத்துவர்கள் சர்க்கரைப் பூசணியின் சதைப்பற்றை கோழையாகக் கட்டிக் கொண்டு விடாது அடம் பிடிக்கும் சளியை கரைத்து நெஞ்சுக் கோளாறுகளை தீர்க்கப் பயன்படுகிறது. பறங்கிக்காயில் பொதிந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

அதில் புத்துணர்வு தரக் கூடிய வேதிப் பொருட்கள் மிகுந்திருப்பதால் உடல் உறுப்புகளுக்கும் உடலைப் பாதுகாக்கும் தோலுக்கும் புத்துணர்வு தருவதோடு ஆரோக்கியத்தோடு விளங்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி திசுக்கள் அழிவுறா வண்ணம் பாதுகாக்கின்றன. பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது.

பூசணிக்காயில் துத்தநாகம் சத்து மிகுதியாக உள்ளது. இது உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி விடுவதோடு உடலுக்கு கடைக்கால் போல விளங்கும் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. பூசணிக்காயில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்சிக்கல் ஏற்படா வண்ணம் உதவி செய்கிறது.

இதனால் பல்வேறு இதய நோய்களும் புற்று நோய்களும் ரத்தத்தில் சர்க்கரைக்குறைபாடும் தவிர்க்கப்படுகின்றன. பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அதில் அடங்கியிருக்கும் அபரிமிதமான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நீண்ட நேரம் பசியைத் தடுக்கும் வகையில் வயிற்றை நிரம்பியிருக்கும் உணர்வுக்கு வைத்திருப்பதால் அடிக்கடி உணவு உண்பதும் அதிகமாக உணவு உண்பதும் தவிர்க்கப்பட்டு உடல் எடை கூடுவதற்கான கொழுப்புச் சத்தைத் தவிர உடல் ஆரோக்கயத்துக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் மினரல்களை அது அளிக்கிறது பூசணியில் மிகுந்திருக்கும் பேண்டோதெனிக் அமிலம் அல்லது விட்டமின் பி5 உடலின் சுரப்பிகளை சம நிலையில் இருக்குமாறு செய்கிறது.

மேலும் மானிடர்க்கே உரித்தான மன உளைச்சலை போக்குவதற்கும் உதவுகிறது. பூசணி விதையில் அடங்கியருக்கும் பைட்டோ ஸ்டிரால்ஸ் மற்றும் உடல் பாதுகாப்புக்கான கூட்டுப் பொருட்கள் ஆண்களுக்குத் தொல்லை தரும் புரோஸ்டேட் புற்று நோயைத் தணிக்க வல்லது. அல்லது குணப்படுத்தவல்லது.

பூசணி விதையின் எண்ணெய் சிறுநீரகக் கோளாறுகளுக்கும், மூட்டு வலிகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகிறது. இது ஒட்டுண்ணிகளுக்கு எதிரானது. பூசணி விதைகள் சிறுநீரக  கற்கள் தோன்றுவதற்கான காரணிகளுக்கு எதிராக செயல்பட வல்லது. கிரீஸ் நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி 2009ம் ஆண்டு பூசணி விதையின் எண்ணெய் ஒரு புத்துணர்வு தரக் கூடியதாகவும் விட்டமின் ஈ சத்து அதிகப்படியாகக் கொண்டுள்ளதாகவும் இருப்பதால் உடல் சோர்வால் ஏற்படுகிற இதய நோய்கள், மறதி நோய் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது.

வெண் பூசணிச்சாறு ரத்தத்தைக் கட்டுபடுத்தக் கூடியது. புதிதாக தயாரித்து பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து உள்ளுக்கு குடிப்பதால் நுரையீரலினின்று கசியும் ரத்தம் தடுக்கப்படும் மேலும் சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளிப்படுவது தவிர்க்கப்படும். பூசணி சதையை உலர்த்தி சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டு சேர்த்து உண்ண கோடை கால வெப்பத்தால் உண்டாகும் அழற்சி குணமாகும்.

30 கிராம் பூசணி விதையை வறுத்துச் சர்க்கரை கலந்து இரவு படுக்கப் போகுமுன் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவிட வயிற்றிலுள்ள தட்டைப் புழுக்கள் வெளியேறும். பூசணிக்காய் சதையை விதை நீக்கி வேக வைத்துப் பிசைந்து ஆறாத நாற்றம் தருகிற புண்களின் மீது வைத்துக் கட்டி வர நாற்றம் நீங்கி சதை வளர்ச்சி கண்டு புண்கள் விரைவில் ஆறிவிடும்.

பொதுவாக நாம் பூசணிக்காய் நமக்கு சளி இருமலை உண்டாக்கும் என நினைக்கிறோம். அது தவறு. அது முத்தோஷ சமனி என்னும்படி வாத பித்த சிலேத்தும் கூறுகளைச் சமன் செய்யக் கூடிய ஒன்று. அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு இது அருமையான நிவாரணி ஆகும். ஆஸ்துமாவையும் இது குணப்படுத்தும்.

வெண்பூசணியில் ஊட்டச்சத்துக்களான அமினோ ஆசிட்டுகள் ம்யூசின், மினரல்ஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, ரிப்போப்பிளேவின், தயாமின், நியாசின், விட்டமின் பி, சி, மேலும் திசு வளர்ச்சிக்கான பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது. பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல திடமான ஆரோக்கியமான உடலுக்கு உணவாகவும் உணவே மருந்தாகவும் அமையக  கூடியது என்பதை உணர்ந்து அடிக்கடி உணவில் சேர்ப்போம். பூசணிக்காய்

Related posts

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

nathan

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்

nathan

சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு

nathan

உடல் எடையினால் அவதிப்படுகிறீர்களா?

nathan

தண்ணீரில் ஊறவைத்த பயறை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாமா?

nathan

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika

சுவையான தேங்காய் கோதுமை தோசை

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடலாமா?

nathan