28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
slices of star fruit
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்….!!

நட்சத்திரப் பழத்தின் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
நட்சத்திரப் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட நட்சத்திரப் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும்.
இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு.
நட்சத்திரப் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நட்சத்திரப் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நட்சத்திரப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

குறிப்பு: இப்பழத்தில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகளவு காணப்படுகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்ப்பது நலம்.

Related posts

சுவையான பூசணிக்காய் சப்பாத்தி

nathan

தயிர் நெல்லிக்காய்

nathan

அதிர்ச்சி தரும் ஆய்வின் ரிசல்ட் ! ஃப்ரூட் ஜூஸ் புற்றுநோயை உண்டாக்குமா?

nathan

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

காளான்களை அதிகம் சாப்பிடுவது அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது…

nathan

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இரவில் தயிர் சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan

காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை

nathan