30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டே இருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு விழும். இதனால் அதிகமாக வலி ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நரம்பு சுருட்டல் என்ற வெரிகோஸ் வெயின் வந்துவிட்டால் பாதங்களில் வீக்கம், அரிப்பு, வலி உணர்வு அதிகமாக ஏற்படும்.

இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை வரும்.

ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த நோய் தாக்குகிறது.

இதை எப்படி வீட்டு வைத்தியத்தில் முறியடிக்கலாம் என்று பார்ப்போம்

  • மஞ்சள் – ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை – ஒரு கைப்பிடி, வசம்பு- 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.
  • இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும்.
  • அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.
  • அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.
  • சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.
  • மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால் படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.
  • நரம்பு சுருட்டலை அறிந்ததும் மருந்து கடைகளில் கிடைக்கும் சுருக்க கால் உறைகளை. பொதுவாக கால் வலி இருப்பவர்கள், இதை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸை அணிவதன் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து காலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை இதயத்தை நோக்கி செல்வதற்கு தூண்டுகின்றன. இதனால் நரம்பு வீக்கம் குறையும்.

Related posts

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுருள்பாசி

nathan

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு குறைபாட்டுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாம்… உஷார்…!

nathan

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்க எழுந்ததும் இதை செய்யுங்க

nathan

சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள்…

sangika

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

nathan

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி !

nathan

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்: நரம்பு மண்டலத்தை பாதிக்கும்..

nathan

உங்களுக்கு தெரியுமா தூக்கமின்மையால் வரும் பிரச்சினைகள் தெரியுமா?

nathan