24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
v 1547
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

இப்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் முடியை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உண்மையில் இது நல்ல விஷயம் கூட. முன்பெல்லாம் முடியை கண்டு கொள்ளாமலே இருக்கும் ஆண்கள் பலரும் இன்று, அதனை கவனத்துடன் பார்த்து கொள்கின்றனர். முடியை பராமரிக்காமல் இருந்தால் நமது முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, வழுக்கை விழுந்து விடும்.

இன்றைய மக்கள் தொகையில் ஆண்களுக்கே வழுக்கை அதிகமாக உள்ளது. முடி தான் நம்மை தனித்துவமான முறையில் அடையாளம் காட்டுகிறது. நமது முடிக்கு இந்த பெருமையை தருவது முடியை வெட்டும் முறைதான். முடியை கண்டபடி நாம் வெட்டினால் அது நமது அழகை குறைத்து விடுமே தவிர, அதிகரிக்காது. எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல்கள் உங்களை 10 வயது குறைந்தவரை போல காட்ட கூடும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

 

ஹேர்ஸ்டைல் பேசுமே..!

நாம் ட்ரெண்டானவரா அல்லது பழமைவாதியா என்பதை நமது ஹேர்ஸ்டைலே பேசி விடும். நாம் சாதாரணமாக வெட்டும் ஹேர்ஸ்டைல்கள் அவ்வளவும் நம்மை எடுத்து காட்டாது. இதுவே உங்களின் முக வாட்டத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.2 15471

வெட்டும் முறை…

முடியை எப்போதும் வழித்து கொண்டு வெட்டாமல், மேல் நோக்கிய படி வெட்டினால் இளமை துள்ளலாக இருக்கும். மேலும், முடியை ஒட்ட வெட்ட கூடாது. இதுவும் அழகான பொலிவை உங்களுக்கு தராது. மேலும், அடர்த்தியான முடி கொண்டவர்கள் முடியை நீளமாக வளர்த்து கொள்ளாமல், மேல் நோக்கியபடி வெட்டினால் நல்லது.

ஷேவ் முக்கியம்..!

தலை முடியை பற்றி பேசும்போது தாடியின் முடியை நாம் மறந்து விட கூடாது. தாடியின் முடி அழகாக இருந்தால் தான் ஒட்டுமொத்தமாக நம்மை இளமையாக மாற்றும். எனவே, எப்போதும் ஷேவ் செய்தபடி இருந்தால், உங்களை இது இளமையாக காட்டும்.

வெள்ளை வெள்ளை..!

உங்களுக்கு 10 வயது குறைய வைக்க முதலில் உங்களின் முடியில் உள்ள வெள்ளைகளை விரட்டி அடியுங்கள். அதாவது, வெள்ளை முடிகளை இயற்கை முறையில் கருமையாக மாற்றுங்கள். இதுதான், உங்களை இளமையாக காட்ட சிறந்த வழி.

எப்போவுமே புதுமை..!

உங்களுக்கு 30 வயசோ, அல்லது 40 வயசோ..! எதுவாக இருந்தாலும் இளமை உங்களிடம் தான் உள்ளது என்பதை மறவாமல் புது புது விதமான ஹேர் ஸ்டைல்களை வெட்டி கொள்ளுங்கள். இது உங்களை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.

வழுக்கையா..?

உங்களது தலையில் ஒரு சில இடத்தில் மட்டும் முடி இல்லாமல் இருக்கிறதா..? இது உங்கள் அழகை முழுவதுமாக கெடுக்கிறதா..? இனி இதற்கு தீர்வு இதுதான். வழுக்கை தெரியாமல் இருக்க, முழுவதுமாக மொட்டை அடித்து விடுங்கள். இது கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் உங்கள் வழுக்கை பிரச்சினையை தீர்க்க இது சிறந்த முடிவாக இருக்கும்.v 1547

வகுடு எடுத்த தலையா..?

நீங்கள் இளமையாக தெரிய வேண்டுமென்றால் வகுடு எடுத்தபடி வாராதீர்கள். இது உங்களின் அழகை பாழாக்கி விடும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், முடியை கீழ் நோக்கியபடியும் வாராதீர்கள்.

இது நல்லா இருக்கும்..!

சில ஆண்கள் அதிக இளமையாக தெரிய, தலையின் இரு புறத்தில் இருக்க கூடிய முடியையும் கொஞ்சம் ட்ரிம் செய்து, மற்ற இடத்தில் முடியை அதிகமாக இருக்கும் படி முடியை வெட்டுவார்கள். இது ஹேர்ஸ்டைல் நன்றாக இருக்கும். இத்துடன் குறுந்தாடியும் இருந்தால் மிக சிறப்பு.

Related posts

முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை !!

nathan

பொடுகை விரட்ட வேப்பம்பூ

nathan

முடி வளர்ச்சியைத் தரும் தும்மட்டி பழங்கள் !! முடியை மீண்டும் வளர வைக்கும். இள நரையைப் போக்கும்.

nathan

உங்களுக்கு தெரியுமா பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது…

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும்.

nathan

பொடுகு தொல்லையை எளிமையாக இயற்கை முறையில் போக்கும் வழிகள் – தெரிந்துகொள்வோமா?

nathan

தேயிலை மர எண்ணெயை முடி உதிர்தலுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? இப்டி ட்ரை பண்ணுங்க!!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மசாஜ்

nathan

உங்களுக்கு தெரியுமா மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் ஆயுர்வேத குறிப்புகள்…

nathan