தலைமுடி சிகிச்சை

உங்க முடி ரொம்ப வறண்டு போகுதா? அப்ப உடனே இத படிங்க…

உங்கள் கூந்தல் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்போ இத செய்ஞ்சு பாருங்க. அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி மேக்கப் போட்டு வெளியே சென்றால் சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் எல்லாம் சேர்ந்து உங்கள் கூந்தலை பொலிவின்றி வறண்டு போக வைத்து விடுகிறதா? வறண்ட கூந்தல் நம் பிரச்சினை மட்டுமல்ல அழகையும் கெடுக்கும் ஒரு விஷயம்.

சரி இதற்கு என்ன தான் செய்வது என்று புலம்புறீங்களா? கவலையை விடுங்க. நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும் வறண்ட கூந்தல் பிரச்சினையிலிருந்து மீளலாம்.

காரணங்கள்
ஹேர் ஸ்டைலிங் பொருட்கள்

கூந்தலை பராமரிக்க ஏராளமான ஹேர் ஸ்டைலிங் பொருட்கள் உள்ளன. ட்ரையர், ஸ்யிட்டனர் போன்ற வெப்பமான கருவிகளை பயன்படுத்தும் போது கூந்தலை வறண்டு போக வைக்கிறது. இதே மாதிரி முடியை நேராக்குவதற்கான கூந்தல் பராமரிப்பு பொருட்களும் முடியை வறட்சி அடைய செய்து விடுகின்றன.

அதிகமான டை (கலர் சாயங்கள்) பயன்படுத்துதல்

கெமிக்கல் கலந்த தீங்கு விளைவிக்கக் கூடிய டைக்களை கூந்தலுக்கு பயன்படுத்துதல். இதனால் கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி கூந்தல் வறண்டு போகிறது.

சுற்றுப்புறச் சூழல்

அதிகமான வெப்பம், குளிர், ஈரப்பதம் போன்றவை கூந்தலின் சூழ்நிலையை மாற்றி வறட்சி அடைய செய்கிறது. அதிகமாக சூரிய ஒளி பட்டாலும் கூந்தல் வறண்டு போகும்.

அதிகமாக கூந்தலை அலசல்

கூந்தலை சுத்தமாக அலசி தூய்மையாக கண்டிஷனர் எல்லாம் தேய்த்து வைத்துக் கொள்வது முக்கியம் தான். ஆனால் அதிக தடவை கூந்தலை அலசும் போது கூந்தலில் உள்ள எண்ணெய் பசை நீங்கி வறண்டு போய் விடும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை நீங்கள் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வில்லை என்றால் ஆரோக்கியமான கூந்தல் கிடைப்பது அபூர்வம் தான்.

தைராய்டு பிரச்சினை ஹைப்போ தைராய்டிசம் காணப்பட்டால் வறண்ட கூந்தல் ஏற்படும். இது தைராய்டு ஹார்மோன் குறைவால் ஏற்படுகிறது. வழிகள்

மைல்டு ஷாம்பு உங்களுக்கு வறண்ட கூந்தல் பிரச்சினை இருந்தால் மைல்டு சாம்பு கொண்டு மட்டும் கூந்தலை அலசுங்கள். ஏனெனில் சாம்பு வில் உள்ள கெமிக்கல் முடியில் உள்ள எண்ணெய் பசை ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். மைல்டு சாம்பு கூந்தலை சுத்தம் செய்வதோடு தலையில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கிறது.

கண்டிஷனர் கண்டிப்பாக கண்டிஷனர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். சாம்பு போட்டு முடிந்த பிறகு தலைக்கு கண்டிஷனர் போட்டு அலசுங்கள். தலையில் கண்டிஷனரை அப்ளே செய்து 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு அலசவும். சில நேரங்களில் வறண்ட கூந்தல் உடையவர்கள் கண்டிஷனரை இரவில் கொஞ்சம் அப்ளே செய்து விட்டு காலையில் எழுந்ததும் அலசலாம். நல்ல பலன் கிடைக்கும். கொஞ்சமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள் நிறைய பேர்கள் கூந்தல் வறண்ட போவதை தடுக்க, மென்மையாக்க, கூந்தலுக்கு நிறம் கொடுக்க என வரிசையாக கூந்தல் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. அதிலுள்ள கெமிக்கல்கள் கண்டிப்பாக உங்கள் கூந்தலை பாதிப்படைய செய்து விடும். எனவே நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை சுருக்கிக் கொள்ளுங்கள்.

வெப்பமான கருவிகள் வெப்பமான கருவிகளை அதிக சூட்டில் கூந்தலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். என்ன விலையில் இருந்தாலும் வெப்பமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது.

இயற்கை கூந்தல் பராமரிப்பு கெமிக்கல்கள் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை ஒதுக்கி விட்டு இயற்கை பொருட்களை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் கெமிக்கல் பொருட்கள் ஈஸியாக உங்கள் கூந்தலை வறட்சியடைய செய்து விடும். இயற்கை பொருட்களான தேங்காய் எண்ணெய், ஆர்கான் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், அவகேடா எண்ணெய், ஷீ பட்டர், ரோஸ் வாட்டர், களிமண், கரித்தூள், தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தலுக்கும் இயற்கையான பொலிவு கிடைக்கும்.

ஆலிவ் ஆயில் சிகச்சை ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை என கூட செய்து வரலாம். ஆலிவ் ஆயிலை கூந்தலில் அப்ளே செய்யும் பொது அது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு வறண்ட மற்றும் பொடுகு தொல்லையை போக்குகிறது.

அவகேடா மாஸ்க் அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த வரப்பிரசாதம். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

முட்டை மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு, ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் கூந்தலில் அப்ளே செய்ய வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதைச் செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

கற்றாழை உங்கள் வறண்ட கூந்தல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும் படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களை க்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம் வாழைப்பழம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள் கூந்தலுக்கும் உதவுகிறது. வறண்ட கூந்தல் தலையில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதிலுள்ள இயற்கையான எண்ணெய் பசை, பொட்டாசியம், விட்டமின்கள் போன்றவை கூந்தலுக்கு இயற்கையான வலிமையை கொடுக்கிறது. கூந்தலின் நுனி பிளவுபடுவதை தடுக்கிறது. மேலும் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பட்டு போல் ஆக்குகிறது. பிறகென்ன உங்கள் வறண்ட கூந்தலுக்கு பை பை சொல்லி இயற்கையான எழில் மிகு கூந்தலை பெறுங்கள்.

0837

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button